Sarathkumar: அதிதியை கடத்தி.. நாடு நாடாக சுத்தி.. நேசிப்பாயா படக்கதையை வெளிப்படுத்திய சரத்குமார்!
சென்னை: அஜித், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அடுத்ததாக நேசிப்பாயா படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படம் வரும் 14ம் தேதி பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள சரத்குமார் படம் குறித்த தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படத்தின் கதைக்களத்தையும் அவர் கூறியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நேசிப்பாயா படம்: இயக்குநர் விஷ்ணுவர்தன், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பில்லா உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர். பாலிவுட்டிலும் தன்னை சிறப்பான இயக்குநராக வெளிப்படுத்திய விஷ்ணுவரதன் அடுத்ததாக நேசிப்பாயா படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் 14ம் தேதி பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர், சரத்குமார், குஷ்பூ உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
இசை வெளியீட்டு விழா: இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். மேலும் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர், இயக்குநர் விஷ்ணுவர்தன் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் கலந்துகொண்டு பல சுவாரசியங்களை பகிர்ந்துள்ளார். படத்தில் அவரது கேரக்டர் குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய கேரக்டர் குறித்தும் தான் படத்தில் நடித்திருப்பது குறித்தும் வெளிப்படுத்த வேண்டாம் என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியதாகவும் ஆனால் தான் வழக்கம் போல பேசி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேசிப்பாயா படத்தின் கதை: படத்தில் நடிகை அதிதி ஷங்கரை கடத்தி சுவிட்சர்லாந்து, அசர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுக்கு தான் கொண்டு செல்வதாக கதைக்களம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் தன்னுடன் குஷ்பூ உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளது குறித்தும் அவர் பேசியுள்ளார். ஆகாஷ் முரளி மற்றும் அதர்வாவின் திரை பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த சரத்குமார் அவர்களின் அப்பா மறைந்த நடிகர் முரளி மேலிருந்து அவர்களை ஆசீர்வாதம் செய்வார் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். படத்தில் தன்னுடைய கேரக்டர் சிறிதாக இருந்தாலும் மிகவும் சவாரஸ்யமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரக்டர் குறித்து சரத்குமார் பேச்சு: இந்தக் கேரக்டர் குறித்து விஷ்ணுவர்தன் கூறியபோது, இதை தான் செய்ய வேண்டுமா என்று கேட்டதாகவும் அதற்கு அவர் நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார். படத்தில் தன்னுடன் ஆண்ட்ரியா உள்ளிட்ட 3 மூன்று நடிகைகள் நடித்ததாகவும் குறிப்பாக ஆண்ட்ரியாவை காதலிக்கும் காட்சிகள் அமைந்திருந்ததாகவும் ஆனால் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வராதது வருத்தம் அளிப்பதாகவும் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். படத்தின் முதல் காட்சியின்போது ஆகாஷ் முரளி, தன்னிடம் காட்சி குறித்து பதட்டத்துடன் பேசியதாகவும் இத்தனை ஆண்டுகள் கழிந்த நிலையில் தானும் அந்தப் பதட்டத்துடன்தான் அனைத்து படங்களையும் அணுகுவதாகவும் சரத்குமார் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











