ஒருமையில் திட்டிய ரசிகர்.. ட்வீட்டை ஒழுங்காக பாத்தியாடா".. பதிலடி கொடுத்த தமிழ் நடிகர் !

சென்னை : ஒருமையில் திட்டிய நபருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிக‌ர் சரத்குமார்.

Recommended Video

Nattamai Teacher Raksha இன்றைய நிலை | SarathKumar, Vikram Gemini

மிக நீண்ட எதிர் பார்ப்புடன் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT ல் வெளியிடப்பட்டது. இதற்கு திரைத்துறையில் இருந்து பலரும் வாழ்த்துக்கள் சொல்லி வரும் வேளையில், நடிகர் சரத்குமாரும் படத்தை பார்த்துவிட்டு தனது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அந்த பதிவிற்கு பதிலளிக்கும் நோக்கில் சரத்குமாரை ஒருமையில் பேசிய ஒருவருக்கு தனது பாணியிலேயே பதில் அளித்துள்ளார்.

வெள்ளி விழா

வெள்ளி விழா

தமிழில் முன்னணி நடிகராகவும் எவரிகிரீன் ஸ்டாராகவும் இருந்து வருபவர் நடிகர் சரத்குமார். இவர் சில படங்களை தயாரித்தும் வந்துள்ளார். இவர் நடித்த சூரியவம்சம், நட்புக்காக போன்ற பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியுள்ளன. அதே சமயம் உடற்பயிற்சிக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். எப்போதும் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சி வீடியோக்களை ட்விட்டர் மற்றும் பேஸ்புகில் பதிவிட்டு தனது ராசிகர்ளுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இந்நிலையில் பல பிரச்சனைகளுக்கு பின் நீண்ட எதிர்பார்ப்புடன் OTT ல் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியிடப்பட்டது.. இதற்கு திரைத்துறையில் இருந்து பலரும் வாழ்த்து சொல்லியும் படத்தை பற்றி பேசியும் வரும் வேளையில், நடிகர் சரத்குமாரும் படத்தை பார்த்துவிட்டு தனது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, இது மிகச்சிறந்த படம், இயக்குனர் ப்ரிட்ரிக் நன்றாக வடிவமைத்துள்ளார் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் பெருமைகள் அனைத்தும் உங்களையே சேரும் என்று பதிவிட்டு ஹாஸ் டேகில் பொன்மகள்வந்தாள்,ஜோதிகா மற்றும் சூர்யாசிவகுமார் போன்றோரை டேக் செய்திருந்தார்..

ஆக்ட்டிவ்

ஆக்ட்டிவ்

பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் சரத்குமார் எப்போதுமே ஆக்ட்டிவாக இருப்பவர்.அதே போல் முடிந்தவரை தன்னுடைய ரசிகர்களுக்கு அவர்கள் போடும் ட்விட் ரிப்ளைகளுக்கு தன்மையாக பதிலும் கூறிவிடுவார்.

கண்டிப்பாக சகோதரா

கண்டிப்பாக சகோதரா

இந்நிலையில் சரத்குமாரின் பொன்மகள் வந்தாள் பதிவிற்கு ஒருவர் " யாருக்கு வாழ்த்து சொல்றீங்க, யார் இதை பார்த்து உங்களுக்கு ஓட்டு போட போறீங்க தயவு செய்து தமிழில் பதிவு போடுங்க.. அப்போ ஏன் ஆங்கிலேயரை விரட்டி அடித்தீர்கள் தமிழை நீங்களே பேசலன்னா பின்ன யாரு பேசுவா" எனக்கேட்டதற்கு தன்மையுடன் "கண்டிப்பாக சகோதரா" என பதில் அளித்திருந்தார்.

ஒருமையில் கமெண்ட்

ஒருமையில் கமெண்ட்

மற்றொருவர் இவரை ஒருமையில் பேசியபடி கமெண்ட் செய்திருந்தார். அதில் அவர் "சூர்யா ட்விட்டரில் உள்ளார் அவரை டேக் செய்து போடுடா" என்று டீவீட்டை ஒழுங்காக பார்க்காமல் ஒருமையில் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த சரத்குமார் "ட்வீட்டை ஒழுங்காக பாத்தியாடா" என அவரது பாணியில் அந்த நபருக்கு உரைக்கின்ற மாதிரி பதிலை ஒருமையிலேயே சொல்லி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X