Sarathkumar :சூரியவம்சம்.. சூரியன்.. அடுத்தடுத்த படங்களின் 2வது பாகம்.. சரத்குமார் சூப்பர் அப்டேட்!
சென்னை : நடிகர் சரத்குமார் கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2, ருத்ரன் போன்ற படங்கள் ரிலீசாகின.
இந்த இரு படங்களிலும் சரத்குமாரின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுள்ளன. ருத்ரன் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் சரத்குமார். தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.

சூரியவம்சம், சூரியன் படங்களின் 2வது பாகம் : நடிகர் சரத்குமார் வில்லனாக தன்னுடைய கேரியரை துவக்கியவர். தொடர்ந்து ஹீரோவாக நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். நாட்டாமை, சூரியவம்சம் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 150க்கும் மேற்பட்ட படங்களில் சரத்குமார் நடித்துள்ளார். இதில் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிப்படங்களும் அடக்கம். சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் ருத்ரன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகியுள்ளன.
இரண்டு படங்களுமே சரத்குமாருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளன. பொன்னியின் செல்வன் 2 படத்தில் இறுதியில் இவரது கேரக்டர் குறித்து ஐஸ்வர்யா ராய் பேசும்போது இந்தக் கேரக்டரின் முக்கியத்துவம் வெளிப்படும். இதேபோல ருத்ரன் படத்திலும் வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். 40 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார் சரத்குமார். தற்போதும் 20க்கும் மேற்பட்ட படங்களில் சரத்குமார் வில்லன், கேரக்டர் ரோல்கள் என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.
இவரது 150வது படமாக ஸ்மைல் மேன் படம் உருவாகி வருகிறது. இதனிடையே தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிப்படங்களிலும் தானே டப்பிங் பேசி நடித்து வருவதாக சரத்குமார் தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். தான் பல சோதனைகளை கடந்து வந்துள்ளதால், மனதில் அதிகமான வலிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது நிறைவாக இருந்ததாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சரத்குமாரின் வெற்றிப்படைப்பான சூரியவம்சம் 2 படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1997ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் இன்றளவும் சரத்குமார் கேரியரில் பெஸ்ட் படமாக உள்ளது. இரட்டை வேடங்களில் சரத்குமார் இந்தப் படத்தில் நடித்திருந்த நிலையில், படத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கதை உறுதியானால் படத்தை துவங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதேபோல தன்னுடைய மற்றொரு வெற்றிப்படமான சூரியன் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் திட்டமும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இருப்படங்களும் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் தமிழில் குவித்த நிலையில், இந்தப் படங்கள் குறித்த சரத்குமாரின் அப்டேட் ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











