போராடி வெற்றிப் பெற்றவர்.. விஜயகாந்த் பிறந்தநாளில் வாழ்த்துக்களை பகிர்ந்த சரத்குமார்!

சென்னை : நடிகர் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Recommended Video

'விஜயகாந்த் மாதிரி யாரையும் பாக்கல..'- SA Chandrasekhar Interview | Part 1 | Filmibeat Tamil

அந்த வகையில் திரையுலக பிரபலங்களும் நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகர் சரத்குமாரும் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த் தன்னுடைய சினிமா கேரியரில் பல சிறப்பான படங்களை கொடுத்தவர். சிறு வயதிலேயே இவரது கனவில் சினிமா மட்டுமே இருந்தது. இனிக்கும் இளமை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்திற்கு சிறப்பாக கைக்கொடுத்தது தூரத்து இடி முழக்கம் என்ற படம்தான்.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

தொடர்ந்து எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான சட்டம் ஒரு இருட்டறை இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து நூறாவது நாள், ஊமை விழிகள் என தன்னுடைய வலிமையான கேரக்டர்கள் மூலம் இவர் சிறப்பான படங்களை கொடுத்துள்ளார். இந்தப் படங்களில் இவரது கேரக்டர்கள் பேசப்பட்டன.

கேரக்டர் ரோல்களிலும் ஜொலிப்பு

கேரக்டர் ரோல்களிலும் ஜொலிப்பு

தொடர்ந்து கேரக்டர் ரோல்களிலும் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தினார். அம்மன் கோயில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்கள் விஜயகாந்திற்குள் இருந்த சிறப்பான நடிகரை வெளிப்படுத்தின. தொடர்ந்து புலன் விசாரணை போன்ற படங்களும் விஜயகாந்திற்கு சிறப்பாக கைக்கொடுததன.

100வது படம் கேப்டன் பிரபாகரன்

100வது படம் கேப்டன் பிரபாகரன்

இவரது 100வது படமான கேப்டன் பிரபாகரன், திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இந்தப் படத்தை தொடர்ந்தே இவர் ரசிகர்களால் கேப்டன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய 70வது பிறந்தநாளை விஜயகாந்த் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவரை நேரில் சந்திக்க வரலாம் என்று நேற்றைய தினம் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

விஜயகாந்திற்கு சரத்குமார் வாழ்த்து

விஜயகாந்திற்கு சரத்குமார் வாழ்த்து

தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயகாந்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தானும் விஜயகாந்தும் இருக்கும் வகையிலான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

விஜயகாந்தின் போராட்ட குணம்

விஜயகாந்தின் போராட்ட குணம்

எந்த பிரச்சினைகளிலும் போராடி வெற்றி பெற்றவர் விஜயகாந்த் என்றும் அவரிடம் போராட்ட குணம் உள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார். மீண்டும் சிறப்பாக அவர் வரவேண்டும் என்றும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை நாங்கள் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் சரத்குமார் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

 ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

சமீப காலங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் நடிகர் சரத்குமாரை போலவே விஜயகாந்த் மீண்டும் உடல்நலம் தேறி புத்துணர்ச்சியுடன் வரவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X