மகள் கொடுத்த தைரியம்.. நடிகையாக மாறிய சரத்குமாரின் முதல் மனைவி.. எந்த படத்தில் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக நடிகர் சரத்குமார் இருக்கிறார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது குணசித்திர கதாபாத்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.இவரது முதல் மனைவி சாயா தேவி இதுவரை சினிமாவில் முகத்தை காட்டாமல் இருந்த நிலையில், அவர் தற்போது நடிகையாக மாறி உள்ளார்.

நடிகர் சரத்குமார் சினிமாவில் நடிக்க தொடங்கும் போதே சாயா தேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன்பிறகு சரத்குமார், ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

Actor Sarathkumar s first wife Chaya devi acted in Vanangaan movie

வரலட்சுமி சரத்குமார்: சரத்குமாரின் மகள் வரலட்சுமி சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து பலத்திரைப்படங்களில் நடித்த இவர், சண்டைக்கோழி 2 திரைப்படத்திற்கு பிறகு நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதாநாயகி கதாபாத்திரத்தை விட இவருக்கு நெகடிவ் கதாபாத்திரம் பொருத்தமாக இருப்பதால் தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்களே வந்து கொண்டு இருக்கிறது. வரலட்சுமி தமிழை விட தெலுங்கில் கொடி கட்டி பறந்து வருகிறார்.

மகள் கொடுத்த தைரியம்: கணவர், மகள் என குடும்பமே சினிமாவில் இருந்தாலும், அதன் மீது ஈடுபாடு இல்லாமல் இருந்த சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி, பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் வணங்கான் என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அவருடைய கேரக்டர் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாயாதேவி, வணங்கான் படத்தில் நடிக்க முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் , என் மகள் வரலட்சுமி கொடுத்த உற்சாகத்தால் படத்தில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.

உருக்கமான பேட்டி: அண்மையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சாயா தேவி, திருமணம் செய்வதற்கு மனதளவில் சரியாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் தவறான காரணத்திற்காக திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் என்பது ஒரு நாள் கூத்து கிடையாது. திருமணம் என்பது ஒரு பயணம் அதில் நீங்கள் சரியாக பயணிக்க வேண்டும் என்றால் அனைத்து தளங்களிலும் கொஞ்சம் உயர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்துகொள்கிறார்கள். அதெல்லாம் உண்மையான திருமணமே கிடையாது. நீங்கள் தவறான காரணத்தால் செய்தால் அது கடைசியில் விவாகரத்தில் தான் போய் முடியும் என்ற சாயா தேவி விவாகரத்து குறித்து பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X