கூலிங்கிளாஸில் சித்தப்புவுடன் அட்டகாசமாய் போஸ் கொடுத்த பிக்பாஸ் மதுமிதா.. தீயாய் பரவும் போட்டோ!

Recommended Video

Bigg Boss Madhumitha Pongal Special | Mugen | Sembaruthi Paarvathy

சென்னை: நடிகை மதுமிதாவும் நடிகர் சரவணனும் சேர்ந்து எடுத்து செல்பி போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை மதுமிதா ஓகே ஓகே, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ராஜா ராணி, ஜில்லா, டிமான்டி காலனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் மதுமிதா.

மதுமிதாவை அவரது ரசிகர்கள் ஜாங்கிரி, தேன் அடை என்றும் அழைத்து வருகின்றனர். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அசத்தி வரும் மதுமிதாவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

மதுமிதா சினிமா மட்டுமின்றி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்நிலையில் நடிகை மதுமிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது சக ஹவுஸ்மேட்ஸ்களின் டார்ச்சரால் அவர் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

யார் காரணம்?

யார் காரணம்?

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விதியை மீறியதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து விஜய் டிவி மதுமிதா மீதும் மதுமிதா விஜய் டிவி மீதும் மாறி போலீஸில் புகார் அளித்துக்கொண்டனர். தனது தற்கொலை முயற்சிக்கு காரணம் வனிதா, லாஸ்லியா, சாண்டி, கவின், தர்ஷன், அபிராமி என அவர்களின் பெயரையும் குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பினார்.

சித்தப்புடன் மதுமிதா

அதனை தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ளார் மதுமிதா. இந்நிலையில் நடிகை மதுமிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு பிரபலமான சரவணனும் இணைந்து எடுத்த செல்பி போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இருவரும் விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக கள்ளக்குறிச்சி சென்றுள்ளனர்.

மன்னிப்பு

மன்னிப்பு

ஷுட்டிங் ஸ்பாட்டில் இருவரும் கூலிங் கிளாஸ் போட்டப்படி அமர்ந்திருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணன், கல்லூரி நாட்களில் பேருந்தில் செல்லும் போது பெண்களை இடித்ததாக கூறினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டதால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சரவணன்.

சரவணன் அதிருப்தி

சரவணன் அதிருப்தி

ஆனாலும் கண்களை கட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டார் சரவணன். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் டிவியின் இதுபோன்ற செயல்பாட்டால் சரவணனும் தனது அதிருப்தியை தெரிவித்தார். அதன்பிறகு பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற எந்த நிகழ்ச்சிக்கும் சரவணனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X