சித்தப்புடன் செம க்ளோஸாக மீரா மிதுன்.. வைரலாகும் போட்டோ.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுனும் நடிகர் சரவணனும் நெருக்கமாக இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மீரா மிதுன், 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்ற போதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான சேரன், தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி புயலை கிளப்பினார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். ஆனால் தொடர்ந்து வெளியான அவரது ஆடியோக்கள் பெரும் பரபரப்பை கிளப்பின. ஏற்கனவே மீரா மிதுன் மீது பல்வேறு மோசடி புகார்கள் சென்னை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டுள்ளன.

கவர்ச்சி வீடியோ
இந்நிலையில் தமிழ் படங்களில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட மீரா மிதுன் பாலிவுட் சினிமாவில் நடிக்கப்போவதாக மும்பை சென்றுள்ளார். அங்கிருந்தப் படியே கவர்ச்சி போட்டோக்களையும் கவர்ச்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன்.

கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்
அண்மையில் பேண்டீஸ் மட்டும் அணிந்து மேலே உள்ளாடை கூட போடாமல் வலை போன்ற உடையால் மொத்த அழகையும் காட்டினார் மீரா மிதுன். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினர்.
க்ளோஸாக இருக்கும் போட்டோ
இந்நிலையில் மீரா மிதுன், நடிகர் சரவணனுடன் மிகவும் க்ளோஸாக இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சேலையில் படு ஹோம்லியாக உள்ளார் மீரா மிதுன். கூடவே சரவணன் மிக நெருக்கமாக நெற்றியில் பொட்டு குங்கும பொட்டு கழுத்தில் துண்டு என அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.

சித்தப்புக்கு வார்னிங்
இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், சித்தப்பு ரொம்ப கிட்ட போகாதீங்க அப்புறம் நீங்க கண்ட இடத்துல தொட்டிங்க சொல்வாங்க என்று எச்சரித்துள்ளனர்.
மீராவுக்கு என்ன வேலை
இதேபோல் மற்றொரு போட்டோவில், சரவணன், சாண்டி, ரித்விகா மற்றும் தர்ஷன் ஆகியோருடன் சேர்ந்து போஸ் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த குரூப்பில் மீராவுக்கு என்ன வேலை என கேட்டு விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











