இரண்டு மனைவிகளுடன் டக்கராய் போஸ் கொடுத்த சித்தப்பு.. இணையத்தை கலக்கும் போட்டோ!
Recommended Video
சென்னை: நடிகர் சரவணன் முதல் முறையாக தனது இரண்டு மனைவிகள் மற்றும் மகன்களுடன் சேர்ந்து போஸ் கொடுத்த போட்டோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சரவணன் 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுல் ஒருவராக வலம் வந்தார். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் சரணவனன், தற்போது குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கமலுடனான எபிசோடின் போது, தான் இளைஞனாக இருக்கும் போது பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் சென்றதாக கூறினார்.

ஒருமையில் பேசி
இதனால் எழுந்த எதிர்ப்பின் காரணமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சரவணன். ஆனாலும் நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரனை அவர் ஒருமையில் பேசி அடிப்பது போல பாய்ந்ததே அவர் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

போட்டோக்கள்
சரவணன் வெளியேற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் அவரை நேரில் சந்தித்தனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலானது.

ஒரே வீட்டில்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போதே சரவணன் தனக்கு இரண்டு மனைவிகள் என கூறியிருந்தார். மேலும் இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன், என்னை வெளியே அனுப்புங்கள் என்று கூறினார் சரவணன்.

டக்கர் போஸ்..
இந்நிலையில் நடிகர் சரவணன் தனது இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து டக்கராய் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











