Actor Dhanush: ரஜினிக்கு அப்புறம் தனுஷ் படம்தான்.. நடிகர் சரவணன் ஆச்சர்யம்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என கோலிவுட்டில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் வரை பன்முகத்திறனை காட்டி வருபவர். இவரது இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ப பாண்டி படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதுமையில் வரும் காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது தனுஷின் ஐம்பதாவது படமாக அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ளது ராயன்.
இந்த படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்து சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்த தனுஷ், அடுத்தடுத்து படத்தின் நடிகர்கள், நடிகைகளின் கேரக்டர்களை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை தனது வெளியிட்டு வருகிறார். எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் ஆகியோரின் போஸ்டர்களை அவர் இதுவரை வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் கோலிவுட்டில் துவங்கிய தன்னுடைய திரைப்பயணத்தை டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்ன விரிவுப் படுத்தியுள்ளார். மேலும் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல தளங்களில் பயணித்து வரும் தனுஷிற்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றன. கடந்த மாதத்தில் அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியானது. இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறி உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் தனுஷ்.
ராயன் படம்: இதில் தனுஷின் ஐம்பதாவது படமாக அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படம், வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தில் கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து கதைக்களத்தை தனுஷ் உருவாக்கியுள்ளார். படத்தில் தனுசுடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட தனுஷ் தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு நடிகரையும் அவர்களது கேரக்டரையும் வெளிப்படுத்தி வருகிறார்.
அடுத்தடுத்த போஸ்டர்கள்: தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர்களால் அவரது எக்ஸ் தளம் நிரம்பி வருகிறது. இன்றைய தினம் அவர் படத்தின் எந்த கேரக்டரை அறிமுகப்படுத்துவார் என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் சரவணன் ஜெயிலர் படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கத்தில் தான் நடித்துள்ள ராயன் படம் தனக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தான் ஷூட்டிங்கிற்கு முதல்நாள் சென்ற போது தனுஷ் ஒரு நடிகர் தானே அவர் எப்படி பெரிய அளவில் இயக்கத்தை வெளிப்படுத்துவார் என்று நினைத்ததாக சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சரவணன் பாராட்டு: அவரது டைரக்ஷன் ஸ்டைலை பார்த்து தான் மிரண்டுவிட்டதாகவும் சூட்டிங் ஸ்பாட்டில் 300-க்கும் அதிகமான ஆட்களை ஒரே நேரத்தில் நிர்வகித்து தனுஷ் மாஸ் காட்டியதை பார்த்து தான் வாயடைத்துப் போனதாகவும் சரவணன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்தக் கதைகளை நடத்தி, டயலாக் எழுதி தனுஷ்சூட்டிங் ஸ்பாட்டில் மாஸ் காட்டியதாகவும் கூறியுள்ளார். தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது டி51 படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்திற்கு தாராவி என்று பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் நடைபெறும் கேங்ஸ்டர் கதைக்களமாக இந்த படத்தினை உருவாக்கி வருகிறார் சேகர் கம்முலா.


Click it and Unblock the Notifications











