Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆக்ஷன் காட்சியில் வில்லன்களைப் பறக்கவிட்ட சரவணன் ... 200 பேருக்கு பொங்கல் பரிசு
சென்னை: லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சுமார் 200 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கியுள்ளார்.
லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன், விளம்பர படங்களில் நடித்து வந்தார். இப்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அவர் நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இணைந்து இயக்குகின்றனர். இவர்கள் உல்லாசம், விசில் படங்களை இயக்கியவர்கள்.
கீத்திகா திவாரி
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சரவணன் ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் நடிக்கிறார். மற்றும் பிரபு, விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர்.
யோகி பாபு
காமெடி நடிகர் யோகி பாபுவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவர் சரவணனின் நண்பராக படத்தில் வருகிறார்.
ரசிகர் மன்றம்
சரவணன் அருள் பெயரில், கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டன. உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் மாநில தலைமை ரசிகர் மன்றம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றத்தின் போஸ்டர்கள் சென்னையில் பரபரப்பாக ஒட்டப் பட்டிருந்தன.
பாடல் காட்சி
இந்நிலையில், படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் லெஜண்ட் சரவணன், கீத்திகா திவாரி பங்கேற்று நடித்தனர். இதற்காக ரூ.10 கோடி செலவில் அரண்மனை அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
லேப் செட்
இந்நிலையில் இந்தப் படத்துக்காக பிரமாண்ட லேப் செட் அமைத்து ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அனல் அரசு மாஸ்டர் இதை இயக்கினார். சுமார் 20 பேருடன் மோதிய சரவணன், படப்பிடிப்பு முடிந்ததும் பங்கேற்ற சுமார் 200 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கியுள்ளார்.