For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆக்‌ஷன் காட்சியில் வில்லன்களைப் பறக்கவிட்ட சரவணன் ... 200 பேருக்கு பொங்கல் பரிசு

    By
    |

    சென்னை: லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சுமார் 200 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கியுள்ளார்.

    லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன், விளம்பர படங்களில் நடித்து வந்தார். இப்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

    அவர் நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இணைந்து இயக்குகின்றனர். இவர்கள் உல்லாசம், விசில் படங்களை இயக்கியவர்கள்.

    கீத்திகா திவாரி

    கீத்திகா திவாரி

    வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சரவணன் ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் நடிக்கிறார். மற்றும் பிரபு, விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    யோகி பாபு

    யோகி பாபு

    காமெடி நடிகர் யோகி பாபுவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவர் சரவணனின் நண்பராக படத்தில் வருகிறார்.

    ரசிகர் மன்றம்

    ரசிகர் மன்றம்

    சரவணன் அருள் பெயரில், கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டன. உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் மாநில தலைமை ரசிகர் மன்றம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றத்தின் போஸ்டர்கள் சென்னையில் பரபரப்பாக ஒட்டப் பட்டிருந்தன.

    பாடல் காட்சி

    பாடல் காட்சி

    இந்நிலையில், படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் லெஜண்ட் சரவணன், கீத்திகா திவாரி பங்கேற்று நடித்தனர். இதற்காக ரூ.10 கோடி செலவில் அரண்மனை அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

    லேப் செட்

    லேப் செட்

    இந்நிலையில் இந்தப் படத்துக்காக பிரமாண்ட லேப் செட் அமைத்து ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அனல் அரசு மாஸ்டர் இதை இயக்கினார். சுமார் 20 பேருடன் மோதிய சரவணன், படப்பிடிப்பு முடிந்ததும் பங்கேற்ற சுமார் 200 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கியுள்ளார்.

    English summary
    Legend' Saravanan, is making his Tamil film debut. yet to be titled movie written and directed by JD and Jerry. He has given pongal gifts to the movie team
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
    X