Vijay - இளைய தளபதி பட்டம் போடாதீங்க.. அது என்னுடையது.. விஜய் அப்பாவிடம் சண்டை போட்ட நடிகர்
சென்னை: Vijay (விஜய்) இளைய தளபதி பட்டத்தை விஜய் பெயருக்கு முன் போடக்கூடாது என எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சண்டை போட்டதாக நடிகர் சரவணன் தெரிவித்திருக்கிறார்.
விஜய்தான் இப்போது டாப் இரண்டு ஹீரோக்களில் ஒருவர். இளைய தளபதியாக அறிமுகமாகி பின்னர் தளபதியாக மாறி தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா என்ற கேள்வி எழும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருக்கிறது. சினிமாவில் அறிமுகமான புதிதில் அவ்வளவு அவமானங்களை சந்தித்தவர் அவர். ஆனால் அனைத்துக்கும் அமைதியாக இருந்து தன்னுடைய செயல்கள் மூலம் பதிலடி கொடுத்துவருகிறார் அவர்.

கோடிக்கணக்கானவர்கள்: சினிமாவில் கமர்ஷியல் பாதையில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் அவர் தனது மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்துவருகிறார். இதன் காரணமாக விஜய் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி தளபதி விஜய் கூடிய விரைவில் தலைவர் விஜய்யாகிவிடுவார் என்றும் போஸ்டர்கள் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்திருக்கின்றன.
இளைய தளபதி பட்டம்: இதற்கிடையே இளைய தளபதி என்ற பட்டம் முதலில் நடிகர் சரவணனுக்குத்தான் போடப்பட்டது. வைதேகி வந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமான அவர் பொண்டாட்டி ராஜ்ஜியம், மாமியார் வீடு, நல்லதே நடக்கும் என பல படங்களில் நடித்தார். விஜயகாந்த்தின் சாயலில் இருக்கிறார் எனவே பெரிய ரவுண்டு வருவார் என 90களில் இவரைப் பற்றி பேச்சு ஓடிய கதையும் உண்டு. ஆனால் அடுத்தடுத்து அவர் தோல்வி படங்களையே கொடுத்தார்.
பருத்திவீரன்: ஒருகட்டத்தில் தோல்வி படங்களை கொடுத்ததால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் பருத்திவீரன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதில் கார்த்திக்கு சித்தப்பா கதாபாத்திரத்தில் நடித்த அவர் பலரிடம் பாராட்டை பெற்றார். அதன் பிறகும் அவருக்கு பெரிதாக படங்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர் ஜெயிலர் படத்தில் நடித்தார். இந்தச் சூழலில் இளைய தளபதி பட்டம் குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சரவணன் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "எனக்கு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்தான் இளைய தளபதி என்று பட்டம் கொடுத்தார். அதை படங்களிலும் பயன்படுத்தினோம். ஆனால் தொடர்ந்து நான் தோல்வி படங்கள் கொடுத்ததால் பட வாய்ப்பு எதுவும் இல்லை. அதன் காரணமாக பெரிய கேப் விழுந்துபோச்சு. அந்த சமமயத்தில் விஜய்க்கு இளைய தளபதி என போட ஆரம்பித்தார்கள்.
சண்டை போட்டேன்: அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரிடம், 'இளைய தளபதி' என்பது எனக்கு கொடுத்த பட்டம். அதை நீங்கள் விஜய்யின் பெயருக்கு முன்னால் போடக்கூடாது என சண்டை போட்டிருக்கிறேன். அவரோ, உங்களுக்கு படம் வந்தால் நீங்கள் போட்டுக்கொள்ளுங்கள் என்றார். அந்த வயது சிறிய வயது கோபப்பட்டிருக்கிறேன். பொறாமை பட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என்னைவிட விஜய்க்குதான் இளைய தளபதி பட்டம் சரியாக இருக்கிறது. அவர் தொடாத உயரம் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











