அனைவரும் ஒத்துழைத்தால்தான் சினிமாவே எடுக்க முடியும்.. தனுஷ் குறித்த கேள்விக்கு சரவணன் பளிச்
சென்னை: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருக்கும் பல ஹாலிவுட் படங்களைப் போல் இருக்கின்றது என பலர் கூறினர். படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியது.
படத்தின் திரைக்கதை புத்தகத்தினை ஆஸ்கர் விருதினை வழக்கும் அகாடமி நிறுவனமான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வானது. இந்த தகவலை ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்த தகவலைக் கேள்விப்பட்ட பலர் ஒரு இயக்குநராக தனுஷ்க்கு இது மாபெரும் பெருமை என பலரும் தனுஷை பாராட்டினர்.

இந்நிலையில் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்திமான துரை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சரவணன். இவர் தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களுக்குச் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து வருகின்றார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சரவணன் தனுஷ் தன்னை தேர்வு செய்தது குறித்து தெர்வித்துள்ளார்.

லுக் டெஸ்ட்: அதில், முதலில் தனுஷ் என்னை அலுவலகத்திற்கு வரச்சொல்லி, லுக் டெஸ்ட் செய்தார். எப்போதும் இளமையாக இருப்பதாக கூறிவிட்டு, எனது முடியை எடுக்க வேண்டும் எனக் கூறினார். நான் என்னவேண்டுமானுலும் செய்து கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டேன். எனது முடியை எடுக்கச் சொல்லி, ஒரு கண்ணாடி அணியச் சொல்லி, எனக்கான ஆடை வரை அவரே தீர்மானித்தார். அப்படி கொண்டு வரப்பட்ட லுக் தான் படத்தில் நீங்கள் பார்த்த லுக். அவரது இயக்கத்தில் நடித்த அனைவருக்கும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல் சொல்லிக் கொடுத்து வேலை வாங்கினார். அவர் அடுத்து எந்த படத்தினை இயக்கினாலும் எனக்கொரு கதாபாத்திரம் கொடுக்கவேண்டும் என கூறி இப்போதே துண்டு போட்டு வைத்துள்ளேன் என கூறினார்.

கூட்டுக் குடும்பம்: மேலும் செய்தியாளர்கள் தரப்பில் இருந்து தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து சரவணனிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு, " தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் தொடர்ச்சியாக கொடுத்திருப்பார்கள் இல்லையா, அதில் ஏதோ ஒரு ஆர்டர் மாறிவிட்டது. அது குறித்து எனக்குத் தெரியவில்லை. அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. சினிமா என்பது ஒரு கூட்டுக் குடும்பம். அனைத்து துறையினரும் ஒத்துழைத்தால்தான் சினிமாவே எடுக்க முடியும். எல்லா தயாரிப்பாளர்களும் ஒத்துழைத்தால்தான் படம் எடுக்க முடியும். யாரும் ஒத்துழைக்கவில்லை என்றால், யாராலும் படம் எடுக்க முடியாது. இது தானாகவே முடிவுக்கு வரும். இது தொடர்பாக நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்தினருடன் இணைந்து பேசுவார்கள். விரைவில் இதற்கு தீர்வு எட்டப்படும்" என பேசினார்.



Click it and Unblock the Notifications











