பிளாக் அண்டு பிளாக் .. சரவணனின் கெத்தானா போட்டோஷூட் !
சென்னை : ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரிட் ஸ்டாராக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சரவணன் வெளியிட்டுள்ள சர்ப்ரைஸ் போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
1990களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரவணன், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார்.
பொண்டாட்டி ராஜ்யம், சூரியன் சந்திரன் உள்ளிட்ட பல மெகா ஹிட் திரைப்படங்களை தமிழ்சினிமாவுக்கு கொடுத்த சரவணன், இப்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருவதை தொடர்ந்து தற்போது சர்ப்ரைஸாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

வைதேகி வந்தாச்சு
சேலத்தை பூர்வீகமாக கொண்ட சரவணன், பார்க்க விஜயகாந்தின் சாயலிலேயே இருப்பதால் நடிக்க வந்த ஆரம்பத்தில் ரசிகர்களை மிக விரைவிலேயே கவர்ந்தார். 1991 ஆம் ஆண்டு வெளியான "வைதேகி வந்தாச்சு" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட சரவணன் இதுவரை எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

பிஸியான நடிகர்
இவரின் நடிப்பில் வெளியான பொண்டாட்டி ராஜ்யம், சூரியன் சந்திரன், தாய் மனசு, நல்லதே நடக்கும் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வசூல் மழையைப் பொழிந்து சரவணன் 1990களில் மிக பிஸியான முன்னணி நடிகராக வலம் வந்தார்.

மீண்டும் திரையில்
இவ்வாறு உற்சாகமாக வலம் வந்த சரவணன் சொந்த தயாரிப்பில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து அதன் மூலம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது, பின் சிறிது காலம் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இந்நிலையில் இவரது ரசிகர்கள் இவரை மீண்டும் திரையில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் இயக்குனர் அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தில் யாரும் எதிர்பாராத கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.

சர்ச்சைகளிலும் சிக்கினார்
பருத்திவீரன் திரைப்படத்தில் "சித்தப்பு என்கிற செவ்வாழை" மிகவும் பிரபலமாக பேசப்பட்டு பல்வேறு விருதுகளையும் வென்றது. மேலும் பருத்தி வீரன் திரைப்படத்திற்கு பிறகு அனைவராலும் அன்புடன் சித்தப்பு என அழைக்கப்பட்டு வந்த சரவணன் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரையும் ரசிக்க வைத்ததோடு, ஒருசில சர்ச்சைகளிலும் சிக்கினார்.

பிளாக் அண்ட் பிளாக்
சினிமாவில் தற்போது இரண்டாவது சுற்றுக்கு தயாராகி நடித்துவரும் சரவணன் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் செம ஸ்டைலிஷாக பிளாக் அண்ட் பிளாக் கோட் சூட்டில் செம கலக்கலான போஸ் கொடுத்திருக்கும் பல்வேறு புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சிங்கம் களம் இறங்கிடுச்சு
இவ்வாறு வெளியான சரவணனின் சர்ப்ரைஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில் நடன இயக்குனர் சாண்டி அந்தப் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு " சிங்கம் களம் இறங்கிடுச்சு.. சித்தப்பு ஈஸ் பேக்" என பதிவிட்டு தன்னுடைய அன்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











