பாத்ரூமை எட்டிப் பார்த்த பாலா.. அடுத்து செய்ததுதான் ஹைலைட்.. சித்தப்பு சரவணன் ஓபன்!
சென்னை: தமிழ் சினிமாவில் பல மூத்த நடிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தங்களது வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் கியரை மாற்றுவார்கள் அல்லது ரூட்டை மாற்றுவார்கள். அப்படி கியரையும் ரூட்டையும் மாற்றி சக்சஸ் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் தான் நடிகர் சரவணன். கதாநாயகனாக அறிமுகமாகி சில வெற்றிப் படங்களைக் கொடுத்த அவர், ஒரு கட்டத்திற்கு மேல், குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு தன்னை தயார் செய்து கொண்ட இவர், இப்போது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள சட்டமும் நீதியும் என்ற வெப் சீரீஸ் நாளை முதல் அதாவது, ஜூலை 18ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. அதற்கான புரோமோஷனில் மும்முரமாக ஈடுபட்டு வரும் சரவணன், இயக்குநர் பாலா குறித்தும், அவருடன் நந்தா படத்தில் பணியாற்றியது குறித்தும் தெரிவித்துள்ள விஷயங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, " இயக்குநர் பாலா குறித்து பலரும் பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் அவர் கல்லையும் நடிக்க வைப்பார். ஒரு பூ பூப்பது எப்படி யாருக்கும் கேட்காதோ, அதுபோல நடிக்க வைத்துவிடுவார். நந்தா படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றினேன். ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு என்பதால் அங்குள்ள ஒரு ஹோட்டலில் எனக்கு ரூம் போட்டு வைத்திருந்தார்கள். ரூம் கொஞ்சம் முன்ன, பின்னதான் இருந்தது. ராமேஸ்வரம் சுற்றுலாத் தளம் என்பதால், அங்கு ரூம்கள் இப்படித்தான் இருக்கும் என்பதால் நான் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தேன்.
பாத்ரூமை எட்டிப்பார்த்த பாலா: அப்போது எனது அறைக்கு பாலா வருகிறார். வந்தவர் என்னை நலம் விசாரித்துவிட்டு, அறை எனக்கு சௌகரியமாக இருக்கிறதா என்று கேட்டார். கேட்டவர், உடனே பாத்ரூம் கதவைத் திறந்து, பாத்ரூமை எட்டிப் பார்த்தார். உடனே அவர், நான் ஏதாவது செய்கிறேன் இருங்கள் எனக் கூறினார். போனவர் எனக்கு விருந்தினர் மாளிகையில் அறை எடுத்து தங்க வைத்தார். இப்படி நடந்து கொள்ள வேண்டும் என, என்ன இருக்கிறது.
நடிப்பு சொல்லிக் கொடுத்த பாலா: அதேபோல், படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். அடுத்து, சூர்யாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். அதை நான் கவனிக்கலாம் என அருகில் சென்றேன். உடனே அவர், உங்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டேன் அல்லவா, நீங்கள் போகலாம் எனக் கூறினார். அதேபோல், ராஜ்கிரண் சாருக்கு சொல்லிக் கொடுக்கும் போது முகத்தை அவர் நோக்கி வைக்காமல், கவனித்துக் கொண்டு இருந்தேன். அதையும் கண்டுபிடித்த அவர், இங்க கவனிச்சுட்டு இருக்கீங்களா? எனக் கேட்டு, என்னை கவனிக்க வேண்டாம் எனக் கூறினார்.

மனதில் படம்: பாலாவுக்கு கண்ணை மூடினால் மனதிற்குள் படம் ஓடும் என நினைக்கிறேன். அவர் மனதில் தோன்றுவதைப் போல ஷாட் வந்துவிட்டால், முதல் டேக்கில் ஓகே. செய்துவிடுவார். அவர் குறித்து பலரும் பலவிதமாக கூறுகிறார்கள். குறிப்பாக அவர் நடிகர்களை அடிக்கிறார் என்று எல்லாம் கூறுகிறார்கள். ஆனால் நான் அதெல்லாம் ஏற்றுக் கொள்ளமாட்டேன்" என்று கூறினார். ரெட்நூல் யூடியூப் தளத்திற்கு அவர் அளித்த இந்த பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











