ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணையும் பருத்தி வீரன் சித்தப்பு?: எல்லாம் இந்த காரணத்துக்காக மட்டும்தான்

சென்னை: ரஜினியின் 169வது படமான ஜெயிலர் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

Recommended Video

Rajini and Kamal | இப்பவும் இப்படி மிரட்டுறாங்களே! *Kollywood

நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த ரவி ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தில் இன்னொரு முக்கியமான நடிகரும் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமர்க்களமாக தொடங்கிய ஜெயிலர்

அமர்க்களமாக தொடங்கிய ஜெயிலர்

'அண்ணாத்த' படத்திற்குப் பின்னர் நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படத்தில் நடிக்க கமிட் ஆனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு 'ஜெயிலர்' என டைட்டில் உறுதியானது. இதனையடுத்து ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் எப்போது என காத்திருந்த ரசிகர்களுக்கு திடீரென சர்ப்ரைஸ் கொடுத்தது படக்குழு. அதன்படி கடந்த 22ம் தேதி ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.

ஜெயிலரில் இணைந்த நீலாம்பரி

ஜெயிலரில் இணைந்த நீலாம்பரி

ரஜினி ஹீரோவாக நடிப்பதைத் தவிர மற்ற நடிகர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில், ஜெயிலர் ஷூட்டிங் தொடங்கியதுமே, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. 'படையப்பா' படத்திற்கு பின்னர் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் காம்போவை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். அதேபோல்; காமெடிக்கு யோகி பாபு இணைந்துள்ளதும், செம்ம அப்டேட்டாக அமைந்துள்ளது.

பருத்தி வீரன் சித்தப்பு

பருத்தி வீரன் சித்தப்பு

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் நடிகர் சரவணனும் கமிட் ஆகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 1991ல் வெளியான 'வைதேகி வந்தாச்சு' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சரவணன், பொண்டாட்டி ராஜ்ஜியம், தாய் மனசு, சந்தோஷம், நந்தா என பல படங்களில் நடித்திருந்தார். ஆனாலும், அதிகம் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சரவணனுக்கு அமீர் இயக்கிய 'பருத்தி வீரன்' திரைப்படம் மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. கார்த்தியின் சித்தப்புவாக நடித்து அதகளம் செய்திருந்தார் சரவணன்.

நெகட்டிவ் ரோலில் சரவணன்

நெகட்டிவ் ரோலில் சரவணன்

பருத்தி வீரன் படத்திற்கு பின்னரும் சரியான வாய்புகள் அமையாத சரவணன், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'கார்கி' படத்தில் சரவணனின் நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து அவருக்கு ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நெகட்டிவான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X