சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்... நடிகர், நடிகைகள் இரங்கல்!
கோழிக்கோடு: பிரபல மலையாள நடிகர் மரணமடைந்ததை அடுத்து, திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகர் சசி கலிங்கா. சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ள, இவர் கடந்த சில வருடங்களாக கல்லீரல் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, உடல்நிலை மோசமானதை அடுத்து கோழிகோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 59.
வி.சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், சினிமாவுக்காக சசி கலிங்கா என்று பெயரை மாற்றிக்கொண்டார். நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர் இவர்.
ரஞ்சித் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த பலேரி மாணிக்யம், ஆதமின்டே மகன் அபு, ஆமென், வெள்ளிமூங்கா, மோகன்லாலில் புலி முருகன் உட்பட பல முக்கியமான படங்களில் நடித்துள்ளார்.
மறைந்த சசி கலிங்காவுக்கு மலையாள நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாள இசை அமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் நேற்று காலமானார்.
கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால், அவரது இறுதிச்சடங்கில் அதிகமானோர் கலந்துகொள்ள இயலவில்லை. இன்று இன்று சசி கலிங்கா மறைந்திருப்பதால், அவரது இறுதிச் சடங்குக்கு திரையுலகினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











