மதுரைக்காரன் வீடுனா சும்மாவா.. சசிகுமார் கட்டிய பிரமாண்டமான வீட்டைப் பாருங்க
மதுரை: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும், வியாபாரத்தையும் உருவாக்கியுள்ளவர் சசிகுமார். மண் மணம் மாறாத சினிமா, நண்பர்களை மைய்யப்படுத்திய சினிமா என தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். மண் மனம் மாறாமல் சினிமா எடுப்பது மட்டும் இல்லாமல், தனது சொந்த ஊரில் மிகச் சிறப்பாக மிகப்பெரிய வீட்டினைக் கட்டியுள்ளார்.
சுப்பிரமணியபுரம் படத்தினை தயாரித்து, இயக்கி, அதில் நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். சுப்ரமணியபுரம் படம் இன்றுவரை தமிழ் சினிமாவின் தனித்த அடையாளத்தைப் பெற்று பொக்கிஷமாக இருந்து வருகின்றது. சுப்பரமணியபுரம் காலத்தால் அழிக்க முடியாத படைப்பு என்றா அதன் பின்னர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் , சுந்தரபாண்டியன், அயோத்தி போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களாக என்றைக்கும் இருக்கும். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான படம் கருடன். இந்தப் படத்திலும் நட்பின் இலக்கணமாக இருந்தது.

சசிகுமார் தயாரிப்பில் வெளியான பசங்க படம் பல விருதுகளைப் பெற்றது. இன்றுவரை அப்படம் தமிழ் திரையுலகில் குழந்தைகளுக்கான முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் பல பள்ளிகளில் குழந்தைகளுக்கான படமாக இந்த சினிமா இன்றும் திரையிடப்படுகின்றது. சசிகுமார் நடிகராக வருவதற்கு முன்பாக அமீருடன் பணியாற்றினார். அதற்கு முன்பே இவரது மாமாதான் பாலாவின் 'சேது' படத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தார். இதன் மூலம் சினிமா ஆர்வம் இவருக்குள் வந்துள்ளது.
சொந்த ஊர்: இவரது குடும்பம் வசதியான குடும்பம் மட்டும் இல்லாமல் பெரிய குடும்பம். மதுரை மாவட்டத்திலுள்ள புது தாமரைப்பட்டிதான் சசிக்குமாரின் சொந்த ஊர். அங்கேதான் இவரது பூர்வீக வீடு உள்ளது. இங்கே அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசித்து வருகின்றனர். புது தாமரைப்பட்டியை பார்க்கும் போதே சுப்பிரமணியபுரம் படத்தில் வரும் ஊரைப் போன்றே அச்சு அசலாக இருக்கிறது என அங்கு சென்ற பலர் கூறியுள்ளனர்.
பங்களா: பிழைப்பிற்காக வெளி ஊர்களுக்கு, வெளி நாடுகளுக்குச் சென்றாலும் தனது சொந்த ஊரில் நமக்காக ஒரு வீடு இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பது பலரது மனநிலை. என்னதான் சினிமாவில் பெரிய நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இவர் வளர்ந்து விட்டாலும் சொந்த ஊரை இன்னும் மறக்காமல் அப்படியே இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவரது சினிமாவில் வரும் மண் மணம் போல தனது சொந்த வாழ்க்கையிலும் இருக்கின்றார். இதற்கு உதாரணமாக , தனது சொந்த ஊரில் பிரமாண்டமான பங்களாவைக் கட்டி இருக்கிறார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சசிகுமார் கட்டியுள்ள புதிய வீட்டின் புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது.
அண்மையில் கூட சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் தனது தோட்டத்தில் நாற்று நடும் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, தனது வயலில் வேலை செய்தவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்திருந்தார். மேலும் அந்த புகைப்படத்திற்கு ”எங்க வயலில் நடவு.. வயலும் வாழ்வும்” என பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











