ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்க உள்ள நடிகர் சசிகுமார் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜை சந்தித்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

கடந்த 1983ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்து வெளியான படம் முந்தானை முடிச்சு. இதில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி நடித்திருந்தார்.

குடும்ப சித்திரமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. 100 நாட்களுக்கும் மேல் தியேட்டர்களில் ஓடி வசூலை குவித்தது.

ஊர்வசியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

ஊர்வசியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்நிலையில் இந்தப் படம் தற்போது ரீமேக் செய்யப்படவுள்ளது. பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் ஊர்வசி நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுந்தரப்பாண்டியன் இயக்குநர்

சுந்தரப்பாண்டியன் இயக்குநர்

ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை சசிகுமாரின் சிஷ்யனும் பிரபல இயக்குனருமான எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க இருக்கிறார். இவர் இதற்கு முன் சசிகுமாரை வைத்து சுந்தரபாண்டியன் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.

38 வருடங்களுக்கு பிறகு

38 வருடங்களுக்கு பிறகு

இவர்கள் கூட்டணியில் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. முந்தானை முடிச்சு படம் வெளியாகி சுமார் 38 வருடங்களுக்கு தற்போது அப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

இந்நிலையில் சசிக்குமார் மற்றும் படத்தின் இயக்குநரான எஸ்ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜை நேரில் சந்தித்துள்ளனர். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X