பொய் சொல்ல முடியாது.. முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியிலும் சாதிய கொடுமைகள் நடக்குது - நந்தன் இயக்குநர்!
சென்னை: இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நந்தன். இந்தப் படம் நாளை அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் கதையின் நாயகனாக சசிகுமார் நடித்துள்ளார். சரவணன் ஏற்கனவே கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். எனவே இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு பிறந்திருக்கிறது. படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சசிக்குமாருடன் சமுத்திரகனி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படமானது நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.

படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தினைப் பார்த்த விமர்சகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் இயக்குநர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் படத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் அரசு அலுவலகத்தில் வைத்திருப்பதைப் போல காண்பிக்கப்படுகின்றதே என, கேள்வி எழுப்பப்பட்டது.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் ரா. சரவணன், " நான் பொய் சொல்லவில்லை. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தேதியில் நான் 2024ஆம் ஆண்டைத்தான் காட்சிப் படுத்தியுள்ளேன். 2024ஆம் ஆண்டினை படத்தில் காட்டிவிட்டு வேறு ஒருவரை முதலமைச்சராக என்னால் காட்ட முடியாது. இப்போது சாதிய கொடுமைகள் நடைபெறுகின்றது. முதலமைசர் ஸ்டாலின் ஆட்சியிலும் சாதிய கொடுமைகள் நடைபெறுகின்றது. இந்தப் பிரச்னைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை வேறு உள்நோக்கத்துடன் படத்தில் காட்சிப்படுத்தவில்லை" என பதில் அளித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்: இவரது இந்தப் பேச்சு, தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் செய்தியாளர்கள் தரப்பில் இருந்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சி என ஆளும் கட்சியினர் கூறி வருகின்றார்கள். அப்படி இருக்கும்போது, முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை படத்தில் வைத்துள்ளீர்கள் என கேள்வி கேட்கப்பட்டதற்கு, இயக்குநர் மேற்குறிப்பிட்டதைப்போல், பதில் அளித்துள்ளார்.

சசிகுமார்: சரவணன் ஏற்கனவே கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். இவரது படங்களில் திரைமொழிக்கென தனி பாராட்டுகளைப் பெற்றவர். எனவே இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு பிறந்திருக்கிறது. படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சசிக்குமாருடன் சமுத்திரகனி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படமானது நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. அதேபோல் நடிகர் சசிகுமாருக்கும் தொடர்ந்து இரண்டு படங்கள் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. மேலும் வசூலிலும் வெற்றிப் படமாக மாறியது. படம் மீது அனைவருக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால், படம் தமிழ் சினிமாவில் பாராட்டுகளைக் குவிக்கும் படமாக மாறும் என பலரும் பேசி வருகின்றனர். இப்படியான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி குறித்து இயக்குநர் இரா. சரவணனின் கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











