சுப்ரமணியபுரம் 2 வருமா.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சசிக்குமார்.. அதுவும் சரிதான்!
சென்னை: நடிகர் சசிக்குமார் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். சுப்ரமணியபுரம் படம் இவரது கேரியர் பெஸ்ட்டாக மட்டுமில்லாமல் ட்ரெண்ட் செட்டராகவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகளை கடந்த நிலையிலும் இந்தப் படம் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட்டாக உள்ளது.
தற்போது சசிக்குமார் நடிப்பில் நந்தன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் செப்டம்பர் 20ம் தேதி இந்தப்படம் ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்திற்கு முன்னதாக சசிக்குமார் நடிப்பில் வெளியான அயோத்தி, கருடன் படங்களும் மிகப்பெரிய கவனத்தை பெற்ற நிலையில், நந்தன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சசிக்குமார்: நடிகர் சசிகுமார் இயக்குநர். நடிகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி தன்னுடைய அழகான மற்றும் அழுத்தமான படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர். இவரது சுப்பிரமணியபுரம் மட்டுமே இவரது இயக்கம் மற்றும் நடிப்பிற்கு மிகப்பெரிய உதாரணமாக இன்று வரை இருந்து வருகிறது. தற்போதும் அதிகமான ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இந்த படம் இடம்பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் செதுக்கியிருப்பார் சசிகுமார். அறிமுகப்படமாக இருந்த போதிலும் இந்த படத்தின் தாக்கத்தை வேறு எந்த படத்திலும் பெற முடியவில்லை என்று பல ரசிகர்கள் கூறுவதை பார்க்க முடியும்.
நந்தன் படம்: தொடர்ந்து நாடோடிகள் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களை கொடுத்த சசிகுமார் ஒரு கட்டத்தில் இயக்கத்தை கைவிட்டு விட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார். அடுத்தடுத்து சில படங்கள் தோல்வியை கொடுத்த நிலையில் கமர்சியல் படங்களிலும் இவர் நடித்தார். இந்நிலையில் தற்போது சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து கவனத்தை பெரும் படங்கள் ரிலீசாகி வருகின்றன. அயோத்தி, கருடன் உள்ளிட்ட படங்கள் மூலம் மீண்டும் தன்னுடைய ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக வரும் செப்டம்பர் 20ம் தேதி சசிகுமார் லீட் கேரக்டரில் நடித்துள்ள நந்தன் படம் ரிலீசாகவுள்ளது.
சுப்ரமணியபுரம் 2 குறித்து சசிக்குமார்: நந்தன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக இயக்குனர் சரவணன் மற்றும் நாயகி சுருதி உள்ளிட்டவர்களுடன் இணைந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார் சசிகுமார். அந்த வகையில் அவரிடம் சுப்ரமணியபுரம் 2 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது., இதற்கு பதிலளித்த சசிக்குமார், இந்தப் படத்தை ரீமேக் செய்யவே தனக்கு எண்ணமில்லை என்று கூறியுள்ளார். இந்தப் படம் 15 வருடங்களுக்கு பிறகும் கொண்டாடப்படும் நிலையில், அது ஒன்றாகவே இருக்கட்டும் என்றும் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிக்குமாரின் தெளிவான முடிவு: சுப்ரமணியபுரம் 2 படம் குறித்த எண்ணமே தனக்கு இல்லை என்றும் சசிகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவும் சரியாகவே பார்க்கப்படுகிறது. சுப்பிரமணியபுரம் என்பது பல விஷயங்களின் தொகுப்பாக வெளியான நிலையில் இந்த படத்திற்கு மாற்று என்பது யோசிக்ககூட முடியாது என்று ரசிகர்களும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்தப் படம் புத்தகமாகவும் வெளியாகி தற்போதும் புத்தக விழாக்களில் அதிகமாக தேடப்படும் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











