Actor Sasikumar : தோல்வி கற்றுக்கொடுத்த பாடம்.. கடனால் நொந்து போன சசிகுமார்.. மீண்டு வந்த கதை!
சென்னை : தலைக்கு மேல் கடன் இருந்ததால் தான் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறேன் என இயக்குநர் சசிகுமார் வேதனையுடன் கூறியுள்ளார்.
சமீபத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று,வசூலை அள்ளியது.
வித்தியாசமான கதைகளத்தைத் கொண்ட அயோத்தி படத்தில், ராமேஸ்வரம் யாத்திரைக்காக ஊரு விட்டு ஊரு வரும் ஒரு குடும்பம் எதிர்பாராத விபத்தில் சிக்கிவிட. அவரது குடும்பத்தின் விருப்பப்படி பல சிரமங்களுக்கு உட்பட்டு அவர்களுடைய சொந்த ஊருக்கு உடலை அனுப்பி வைப்பது தான் அயோத்தி படத்தின் கதை.

அயோத்தி : மதங்களை கடந்த மனிதாபத்துடன் சசிகுமார், அயோத்தி படத்தில் நடித்துள்ளார். மந்திரமூர்த்தி இயக்கத்தில் பிரியா அஸ்ரானி, குக் வித் கோமாளி புகழ், யஷ்பால் ஷர்மா ஆகியோர் நடத்திருந்த இப்படம் ஜீ5 ஓடிடி தளத்திலும் வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. அயோத்தி திரைப்படம் சசிக்குமாருக்கு ஒரு திருப்புனைப் படமாக அடைந்துள்ளது.
பக்கா பிளான் : இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சசிக்குமார் பல விஷயங்களை மனம் விட்டு பேசி உள்ளார். அதில், சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கிய பின் நாடோடிகள் படத்தில் நடித்தேன். ஒரு படத்தை இயக்க வேண்டும் அடுத்து நடிக்க வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டு சரியான ரூட்டில் போய் கொண்டு இருந்தேன்.
அடுத்தடுத்த தோல்வி : ஆனால், இடையில் நான் தயாரித்த தாரை தப்பட்டை, பலே வெள்ளையத் தேவா போன்ற படங்கள் தோல்வி அடைந்ததால், கடன் அதிகரித்து விட்டது, கடனை சமாளிக்க தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன். ஒரு படத்தை இயக்கவேண்டும் என்றால் குறைந்தது ஓராண்டு ஆகும். ஆனால் நடித்தால் ஆறு மாதத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடியும் கடனை சமாளிக்க முடியும் என்பதால் நடிக்கத் தொடங்கிவிட்டேன் என்றார்.

நண்பர்கள் இல்லை : மேலும்,என் கடனை அடைக்க என் நண்பன் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடாது, நான் அப்படி நினைப்பவன் அல்ல. என் நண்பன் எனக்கு துணையாக என் கூட நின்றால் போதும், அனைத்தையும் நான் சமாளித்துவிடுவேன். இருந்தாலும், ஆனால், இப்போது வாழ்க்கை போகும் வேகத்தில் யார் யாருக்காகவும் நிற்க முடியாது. எனக்கு சினிமாவில் ஒன்றிரண்டு நண்பர்கள் தான் இருந்தார்கள் அவர்களும் இப்போது உடன் இல்லாததால், அது என்னுடைய தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது.
தோல்வி கற்றுக்கொடுத்த படம் : இந்த தோல்வி எனக்கு மிகப்பெரிய பாடத்தை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது. இனி கடன் வாங்கி படம் எடுக்கக்கூடாது, கையில் பணம் இருந்தால் மட்டும் படம் எடுக்க வேண்டும். அதிகமாக கடன் வாங்குவதால், வாழ்க்கையை நிர்ணயிக்கவே முடியவில்லை. 15 பேருக்கு நான் பதில் சொல்லனும்,அவர்களுக்கு பணத்தை சொன்ன தேதியில் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று பல பிரச்சனைகளை சமாளித்தேன் என்று சசிகுமார் பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











