சரண்யா மேம் ஓகேவான்னு கேட்டாங்க.. நான் அதுதான் சரின்னு சொன்னேன்.. சசிகுமார் சொல்றத பார்த்தா?
சென்னை: நடிகர் சசிகுமாரின் சினிமா பயணம் சுப்பிரமணியபுரம் படத்தில் துவங்கியது. இந்த படத்தை இயக்கவும் செய்திருந்தார் சசிகுமார். தொடர்ந்து கோலிவுட்டில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல தளங்களில் செயல்பட்டு வரும் சசிகுமார் அடுத்தடுத்து மிகவும் அழுத்தமான கதைக்களங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் துவங்கிய இவரது பயணம் அடுத்தடுத்த ரசிகர்களைக் கவரும் வகையிலான கதைக்களங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்திருந்த குட்டி புலி படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமான நிலையில் அந்த படம் குறித்து தற்போது தன்னுடைய பேட்டி ஒன்றில் சசிகுமார் பேசியுள்ளார்.

நடிகர் சசிகுமார்: நடிகர் சசிகுமாரின் பயணங்களில் மிகவும் சிறப்பானது சுப்ரமணியபுரம். முதல் படத்திலிருந்து இயக்குனர். நடிகர் என்ற பல பரிணாமங்களில் இவர் தன்னை வெளிப்படுத்தினார். மேலும் தயாரிப்பாளராகவும் பல படங்களில் மாஸ் காட்டி வரும் சசிகுமார், அடுத்தடுத்து அழுத்தமான கதைக்களங்களில் தற்போது நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அயோத்தி, கருடன் படங்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான நந்தன் படமும் அதிகமான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நந்தன் படம்: நந்தன் படத்தை சரவணன் என்பவர் இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தில் அடி, உதை என பலவற்றையும் பெற்று சிறப்பான கேரக்டரை சசிகுமார் வெளிப்படுத்தியதாக சரவணன் தனது சமீபத்திய பேட்டிகளில் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த படம் அடுத்ததாக தெலுங்கிலும் ரீமேக்காக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நடிகை சிம்ரனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க சசிகுமார் கமிட்டாகியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் சசிகுமார், விரைவில் இயக்கத்திலும் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் முன்னதாக தான் நடித்த குட்டி புலி படம் குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
குட்டி புலி படம்: அதில் குட்டி புலி படத்தின் கதைக்களத்தை முன்னதாக பல நடிகர்களுடன் இயக்குனர் முத்தையா பேசியதாகவும் ஆனால் அவர்கள் யாருமே இந்த படத்தின் கிளைமாக்ஸ் குறித்த நம்பிக்கை இல்லாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார். தன்னுடைய மகனுக்காக அவனுடைய நல்ல வாழ்க்கைக்காக அம்மா சரண்யா வில்லனை கொலை செய்வதாக இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காணப்படும். இந்த சம்பவத்திற்கு எந்த நடிகரும் உடன்படாத நிலையில் தான் ஒரு இயக்குனர் என்பதால் இந்த முடிவு குறித்து தனக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருந்ததாகவும் சசிகுமார் கூறியுள்ளார்.
நடிகை சரண்யா கேட்ட கேள்வி: இந்த படத்தில் கமிட்டாகி சசிகுமாரின் அம்மாவாக நடித்த சரண்யாவும் அவரிடம் இது சரியாக வருமா உங்களுக்கு ஓகேவா என்று கேட்டதாகவும், தனக்கு ஓகே தான் மேம் என்று தான் கூறியதாகவும் சசிகுமார் அவரிடம் கூறியதாகவும் தற்போது தன்னுடைய பேட்டியல் தெரிவித்துள்ளார். குட்டி புலி படத்தில் தன்னுடைய மகன் சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக அவருடைய அம்மாவாக நடித்திருந்த சரண்யா அதிகமான வகையில் போராடுவர்.
சசிகுமார் பேட்டி: அந்த வகையில் அவரது வாழ்க்கையை குலைக்க திட்டமிடும் வில்லனிடம் சென்று தன்னுடைய மகனை விட்டு விடும்படி மன்றாடுவார். ஆனால் இதற்கு வில்லன் மறுப்பு தெரிவிக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் அவரை கொலை செய்யவும் அவரது அம்மா துணிவார். இவ்வாறாக அந்த கதை அம்மாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி இருக்கும். இந்த படம் குறித்து தான் தற்போது சசிகுமார் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











