பாடலாசிரியருக்கு பிறந்தநாள்.. சசிக்குமார் கொடுத்த பரிச பாத்தீங்களா? வைரலாகும் ட்வீ ட்!
சென்னை: எம்ஜிஆர் மகன் படத்தில் பாடல் எழுதிய பாடலாசிரியருக்கு நடிகர் சசிக்குமார் பிறந்த நாள் பரிசு வழங்கியுள்ளார்.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் சசிக்குமார். அனைவருடனும் எளிமையாக பழக கூடிய நபரும் ஆவார்.
கடைசியாக அவரது நடிப்பில் நாடோடிகள் 2 படம் ரிலீஸ் ஆனது. தற்போது ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஏப்ரலில் ரிலீஸ்
இதில் எம்ஜிஆர் மகன் படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிர்ணாளினி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பெரும் வரவேற்பு
இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எம்.ஜி.ஆர் மகன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

எனக்கு பிடித்த பாடல்
இதில் அந்தோணிதாசன் மற்றும் பூஜா வைத்யநாத் பாடியுள்ள, "ஏறெடுத்து பாக்காம, என்னண்ணுதான் கேக்காம" பாடலை பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார். இந்த பாடலை "எனக்குப் பிடித்த பாடல்" என்று சசிகுமார் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் பரிசு
இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாடலாசிரியர் முருகன் மந்திரம், சசிக்குமாரின் வாழ்த்தும் பாராட்டும் இந்தப் பிறந்தநாளில் தனக்கு கிடைத்த பெரிய பரிசாக நினைப்பதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











