விஜய் பண்ணத மறக்கவே முடியாது... ஷாஜகான் படத்தில் நடந்ததை பகிரும் நடிகர் சசிகுமார்!

சென்னை : இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சசிகுமார் சுப்ரமணி

விஜய்யுடன் இணைந்து ஷாஜகான் மற்றும் திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்

ஷாஜகான் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் போது ஏற்பட்ட மறக்க முடியாத நிகழ்வுகளை நடிகர் சசிகுமார் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

பல விதமான கதாபாத்திரங்களில்

பல விதமான கதாபாத்திரங்களில்

லிங்குசாமியின் ஆனந்தம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சசிகுமார் சுப்பரமணி . ஆனந்தம்,ஷாஜகான்,கன்னத்தில் முத்தமிட்டால்,ஸ்ரீ ,ஜூலி கணபதி, ஜேஜே, திருப்பாச்சி, தம்பி,தலைநகரம், லீ,தோழா, தனம், படிக்காதவன், அறை எண் 305ல் கடவுள், தலைமுறைகள், மேகா உள்ளிட்ட பல படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து மிகச் சிறந்த நடிகராக உள்ளார் .

தன்னை முழுமையாக அர்ப்பணித்து

தன்னை முழுமையாக அர்ப்பணித்து

சசிகுமார் விஜய்யுடன் ஷாஜகான் மற்றும் திருப்பாச்சி என இரண்டு படங்களில் நடித்திருப்பார். இரண்டிலுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த சசிகுமார் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கச்சிதமாக செய்து முடிக்க கூடியவர். கடைசியாக காக்கை சிறகினிலே என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சசிகுமார் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பொழுது நடந்த மறக்க முடியாத நினைவுகள் பற்றி பகிர்ந்துள்ளார்.

ரயில்வே தண்டவாளத்தில் தலை

ரயில்வே தண்டவாளத்தில் தலை

முதல் படமான ஆனந்தம் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்த திரைப்படம் ஷாஜகான். காதலைப்பற்றி உருவான இந்த படத்தில் காதல் தோல்வியால் விரக்தியான காதலனாக சசிகுமார் நடித்து இருப்பார். அதில் ஒரு காட்சியில் காதல் தோல்வியால் ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்ள முயலும் காட்சி படமாக்கப்பட்டது. அப்பொழுது இயக்குனர் ரவியிடம் நான் இயல்பாகவே வேகமாக ஓடுவேன் என்று கூறியுள்ளார் அதற்கு இயக்குனர் இல்லை கொஞ்சம் மெதுவாகவே ஓடுங்க அப்போ தான் உங்கள பிடிக்க முடியும் என கூறியுள்ளார்.

விஜய் எனக்காக காம்ப்ரமைஸ்

விஜய் எனக்காக காம்ப்ரமைஸ்

அந்த சமயத்தில் விஜய் அருகில் இருந்ததை சசிகுமார் கவனிக்கவில்லை. சசிகுமார் கூறியதை கவனித்த விஜய் இல்லை நீங்கள் எப்படி இயல்பாக வேகமாக ஓடுவீர்களோ அதே போல ஓடுங்கள் எனக்காகவோ, ஒளிப்பதிவாளர்காகவோ

மெதுவாக ஓட வேண்டாம். நீங்கள் இயல்பாக எந்த வேகத்தில் ஓடுவீர்களோ அதே வேகத்தில் ஓடுங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என எனக்காக எந்த காம்ப்ரமைஸும் செய்யாமல் ஷாஜகான் படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்தது எனக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. அது எனக்கு மறக்க முடியாத தருணம்.

விஜய் பண்ணத மறக்கவே முடியாது

விஜய் பண்ணத மறக்கவே முடியாது

அதன்பிறகு விஜய் போக்கிரி படப்பிடிப்பில் இருந்தபோது ஒரே கட்டிடத்தில் நானும் வேறு படத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து இருந்தேன். அப்பொழுது எதிர்பாராத விதமாக விஜய் என்னை கடந்து சென்றார். சென்றவர் அப்படியே திரும்பி வந்து என்னிடம் பேசினார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை . அன்று முதல் இன்று வரை என்னை எங்கு பார்த்தாலும் நல்லா இருக்கியா என்று கேட்காமல் போக மாட்டார். அதை என்னால் மறக்கவே முடியாது. என நடிகர் சசிகுமார் சுப்ரமணி விஜய் உடனான பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X