சமந்தாவை தொடர்ந்து சசிகுமார் உடன்.. ஓடிடி பக்கம் ஒதுங்கிய சிம்ரன்.. டூரிஸ்ட் ஃபேமிலி டீசர் இதோ!
சென்னை: நடிகர் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் சசிகுமார் - சிம்ரன் இருவரும் கணவன் மனைவியாக இரு வளர்ந்த மகன்களுக்கு பெற்றோராக நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜிவிந் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் மேலும் யோகிபாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ கமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டவர்கள் லீட்கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் படம் உருவாகி வருகிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி படம்: நடிகர் சசிகுமாருடன் சிம்ரன் ஜோடியாக நடித்துவரும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் -சிம்ரன் கணவன், மனைவியாக இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் வளர்ந்த இரு மகன்களுக்கு பெற்றோராகவும் நடித்துள்ளனர். இதனிடையே இந்தப் படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இலங்கை தமிழில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் டயலாக் டெலிவரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி பட டீசர்: இந்த டைட்டில் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். படத்தில் சசிகுமார், சிம்ரனுடன் யோகிபாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துவரும் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜிவிந் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அதில் தன்னுடைய மகன்களுடன் சசிகுமார் மற்றும் சிம்ரன் வீட்டை விட்டு ஓட முயற்சிப்பதாக காட்டப்பட்டுள்ளது.

சசிகுமார் & சிம்ரன் ஜோடி: ஊரை விட்டு ஓடும் நேரத்திலும் இவர்களின் நடவடிக்கைகள் சிரிப்பை வரவழைப்பதாக அமைந்துள்ளது. படம் கண்டிப்பாக குடும்ப சென்டிமெண்ட்டுடன் காமெடியை இணைத்துக் கொண்டு நடைபோடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சமந்தாவுடன் இணைந்து சிட்டாடல் ஹன்னி பன்னி தொடரில் நடித்திருந்த சிம்ரன் தற்போது சசிகுமாருடன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணைந்துள்ளார். முன்னதாக இவர்கள் இருவரும் ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் இணைந்து நடித்திருந்தனர். படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து நடத்தப்படும் நிலையில் விரைவில் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிப்பில் கவனம் செலுத்தும் சசிகுமார்: படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். சுப்ரமணியபுரம் போன்ற சிறப்பான படத்தை கொடுத்தவர் சசிகுமார். படங்களை தயாரித்து நஷ்டமான சூழலில் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது அயோத்தி, கருடன் உள்ளிட்ட படங்கள் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ள நிலையில் அந்த வரிசையில் டூரிஸ்ட் ஃபேமிலி படமும் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











