twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆயுத பூஜை.. திருஷ்டியை போக்குவதாக நினைத்து பாவத்தை சுமக்க வேண்டாம்.. நடிகர் அட்வைஸ்!

    |

    சென்னை: ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நகைச்சுவை நடிகரான சதீஷ் மக்களுக்கு அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார்.

    ஆயுத பூஜை தினத்தில் கடைகள், தொழில் நிறுவனங்கள், வண்டி வாகனங்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜைப்போடப்படுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக, திருஷ்டி கழித்து பூசணிக்காயை நடுத்தெருவில் போட்டு உடைப்பதையும் மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் சதீஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார்.

    பாவத்தை சுமக்க வேண்டாம்

    அவர் தெரிவித்திருப்பதாவது, நமது இரு சக்கர வாகனங்களுக்கு பூஜை போட்டு... அந்த பூசணிக்காயை நடு சாலையில் உடைத்து மற்ற வாகன ஓட்டிகளை கீழே விழ வைப்பது அல்ல ஆயுதபூஜை... திருஷ்டியை போக்குவதாக நினைத்து பாவத்தை சுமக்க வேண்டாம்.... பாதுகாப்பான ஆயுதபூஜையைக் கொண்டாடுவோம்.. இவ்வாறு கூறியுள்ளார் சதீஷ்.

    கலாய்

    கலாய்

    சதீஷின் இந்த கருத்தை பல ரசிகர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.

    தமிழகத்தின் விடியலே

    வருங்கால முதல்வர்.. தமிழ்நாட்டின் விடியலே.. உங்கள் கருத்து அருமை என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

    அதுல இதுவும் ஒன்னு

    எத்தனையோ நகைச்சுவை அதுல இதும் ஒன்னு.. அவ்ளோதான் போற போக்குல சிரிச்சுட்டு போக வேண்டியதுதான் என்கிறார் இவர்.

    செமயா பண்ணுவாரு

    நான் சொல்லல தம்பி ரொம்ப கருத்தா பேசுவாரு.. காமெடி கூட செமயா பண்ணுவாருன்னு.. என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Actor Sathish advising people to do not break pumpkin in the middle of the road and not letting the other motorists fall down on Aayutha pooja day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X