twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பீதி.. ஃபோர்த் வேவ்ஸ்னு கிளப்பிவிட்ட லதா மேடம்.. நெட்டிசன்களிடம் கோர்த்து விட்ட நடிகர் சதீஷ்!

    |

    சென்னை: தன்னை லதா மேடம் என கூறி ஆடியோ மெஸேஜ் மூலம் கொரோனா பீதியை கிளப்பியவரை நடிகர் சதீஷ் நெட்டிசன்களிடம் கோர்த்து விட்டுள்ளார்.

    Recommended Video

    தனது வீட்டு வாட்ச் மேன் குறித்து வீடியோ வெளியிட்ட சதீஷ்

    கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே பீதியில் உறைந்து போய் உள்ளது. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுள்ளது.

    இந்தியாவிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென 300ஐ நெருங்கி விட்டது.

    தவறான தகவல்

    தவறான தகவல்

    இதனால் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். இதனிடையே கொரோனா பீதியை மேலும் அதிகரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். சில மெஸேஜ்கள் டெக்ஸ்ட்களாகவும் சில மெஸேஜ்கள் ஆடியோவாகவும் வைரலாகி வருகிறது.

    ஃபோர்த் வேவ்ஸ்

    ஃபோர்த் வேவ்ஸ்

    அந்த வகையில் தன்னை லதா மேடம் என அறிமுகப்படுத்திக்கொண்டு பேசும் பெண் ஒருவர் நாளை சன்லைட் மூலமாக ஃபோர்த் வேவ்ஸ் வர உள்ளதாகவும் அதனால் நாளை யாரும் வெளியே வர வேண்டாம் என அள்ளிவிட்டுள்ளார். இந்த ஆடியோ மெஸேஜை கேட்ட நடிகர் சதீஷ் அவரை நெட்டிசன்களிடம் கோர்த்து விட்டுள்ளார்.

    கவனிச்சு விடுங்க

    இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்
    யாருப்பா இந்த, தன்னைத்தானே லதா மேடம்னு சொல்லிகிட்டு.. சன்டே அன்னைக்கு ஃபோர்த் வேவ்ஸ் வர போகுதுனு சொல்ற லதா மேடம்?!? கொஞ்சம் கவனிச்சி விடுங்கப்பா.. என பதிவிட்டு #LathaMadam என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

    அன் இன்ஸ்டால்

    நடிகர் சதீஷின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அந்த மெஸேஜ் உங்களுக்கும் வந்து விட்டதா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அந்த மெஸேஜ்ஜால் வாட்ஸ்அப்பையே அன்இன்ஸ்டால் பண்ணும் நிலைக்கு போய்விட்டேன் என்று கூறியுள்ளார்.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நாளைக்கு ஜனதா கர்ஃபியூ எனும் சுய ஊரடங்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக அரசு ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் நாளை பேருந்துகள் இயங்காது என அறிவித்துள்ளது.

    English summary
    Actor Sathish asks his fans to take care of Latha madam who is spreading fake message about corona virus.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X