லாஸ்லியாக்கூட சண்டை போட்டா சதீஷ்க்கு ஏன் வலிக்குது.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் லாஸ்லியாவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் லாஸ்லியாவை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறார் சதீஷ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. இலங்கை தமிழரான இவர் அங்கு செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் இதுவரை எந்த பிரச்சனையிலும் சிக்காமல் டீசன்ட்டாக உள்ளார். அவரது தூய்மையான குணத்தை இயக்குனர் சேரனே பாராட்டியுள்ளார். தன் மகளை போன்றவர் என்றும் கூறியுள்ள சேரன் லாஸ்லியாவை தனது மகளாகவே பாவித்துள்ளார் என்பது அவர்களின் நடவடிக்கையில் தெரிகிறது.

சதீஷ் வெளியிட்ட வீடியோ
லாஸ்லியாவுக்கு என ரசிகர்கள் ஆர்மி தொடங்கியுள்ள நிலையில் அந்த ஆர்மியில் அண்மையில் இணைந்தார் சதீஷ். ஆர்மியில் இணைந்த கையோடு ஒரு தாத்தாவிடம் உங்களுக்கு யார் மீது க்ரஷ் என கேட்க அவர் லாஸ்லியா என பதிலளிக்கிறார்.

வைரலான வீடியோ
பலத்த போட்டி கைஸ் என்ற கேப்ஷனில் அந்த வீடியோவை வெளியிட்டார் சதீஷ். அந்த வீடியோ பெருமளவில் வைரலானது.

லாஸ்லியாவை சீண்டிய வனிதா
இந்நிலையில் நேற்று முன்தினம் மதுவுடன் சண்டைபோட்ட வனிதா அன்ட் கோவை அமைதியாக இருக்கும்படி கூறினார் லாஸ்லியா. ஆனால் அவரையும் சீண்டியது அந்த கும்பல்.

லாஸ்லியா ஆர்மி கோபம்
இதனால் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் வேகமாக எழுந்து சென்றார். லாஸ்லியா சாப்பிடாமல் எழுந்து சென்றதால் லாஸ்லியா ஆர்மியினர் பெரும் கோபமடைந்தனர்.
ஏன்யா கோர்த்து விட்டிங்க
இந்நிலையில் அது தொடர்பாக நடிகர் சதீஷும் டிவிட்டியுள்ளார். மேலும் சண்டை போட்ட அந்த கும்பலையுத் திட்டியுள்ளார். அதாவது, அடிப்பாவிங்களா உங்க பிரச்சசனைல செவனேனு சப்பாத்தி சாப்டுகிட்டு இருந்த புள்ளைய ஏன்யா கோர்த்து உட்டிங்க என பதிவிட்டுள்ளார் சதீஷ்.


Click it and Unblock the Notifications











