திருமணத்திற்கு ரெடியான காமெடி நடிகர்.. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது!

Recommended Video

Breaking! Comedy Actor Sathish Engagement VIDEO

சென்னை: நகைச்சுவை நடிகரான சதீஷுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வந்த காமெடி படமான, பொய் சொல்ல போறோம் படத்தில் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றினார். 2006-ல் 'ஜெர்ரி' என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார் சதீஷ்.

பின்னர் ஏஎல் விஜயின் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படம் அவருக்கு என தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பெற்று தந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சதீஷ், நடிகர் விஜயுடன் கத்தி, பைரவா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான சதீஷ், எதிர்நீச்சல், ரெமோ, மான் கராத்தே, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்டோருடனும் பல படங்களில் நடித்திருக்கிறார் சதீஷ்.

கழுத்தில் மாலை

சதீஷுக்கு அவரது பெற்றோர் நீண்ட நாட்களாக பெண் பார்த்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சதீஷ் ஒரு பெண்ணுடன் கழுத்தில் மாலையுடன் நிச்சயதார்த்த கோலத்தில் நிற்கும் படம் தீயாய் பரவி வருகிறது.

மோதிரம் மாற்றும் போட்டோ

மோதிரம் மாற்றும் போட்டோ

மேலும் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ளும் போட்டோவும் வெளியாகியுள்ளது. சதீஷ் திருமணம் செய்ய உள்ள பெண், திரையுலகை சேர்ந்த ஒருவரின் மகள் என கூறப்படுகிறது.

முறைப்படி அறிவிப்பு

முறைப்படி அறிவிப்பு

இது முழுக்க முழுக்க பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போது திருமணம் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து முறைப்படி சதிஷ் அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X