அருவம் படத்தில் யாரும் சொல்லாத விஷயம் இருக்கு- சதீஷ் எக்ஸ்க்ளூசிவ்
சென்னை: அருவம் படத்துல புதுசா ஒன்று சொல்லியிருக்கோம். நம்ம இதுக்கு முந்தி வந்த படத்துல எல்லாம், லஞ்சம், ஊழல்னு ஏதாவது ஒன்றை பத்தி சொல்லியிருப்போம். இந்த படத்துல இது வரைக்கும் யாருமே தொடாத ஒரு சமூக அக்கறை பத்தின விஷயம் இருக்கும். ஹாரர்க்குள்ள அந்த விஷயம் நிச்சயம் இருக்கும் என்று நடிகர் சதீஷ் தன்னுடைய சினிமா அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
செத்த நாய் மேல எத்தனை லாரி ஏறுனா என்ன அதுக்கு தெரியவா போகுது. இந்த டயலாக் காமெடி நடிகர் சதீஷ் பைரவா படத்தில் அடிக்கும் பஞ்ச் டயலாக். பைரவா படத்தில் அவ்வப்போது சில பஞ்ச் டயலாக் அடித்திருந்தாலும் இந்த டயலாக் தான் டக்கென்று மனதில் நிற்கும் டயலாக்.

நடிகர் சதீஷ் 2006ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வந்தாலும், இவரை நல்லதொரு காமெடி நடிகராக அடையாளம் காட்டியது, மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி, பைரவா, கலகலப்பு 2 போன்ற படங்கள் தான். தற்போது நடித்து முடித்துள்ள அருவம் ஹாரர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அருவம் படத்துல புதுசா ஒன்று சொல்லியிருக்கோம். நம்ம இதுக்கு முந்தி வந்த படத்துல எல்லாம், லஞ்சம், ஊழல்னு ஏதாவது ஒன்றை பத்தி சொல்லியிருப்போம். இந்த படத்துல இது வரைக்கும் யாருமே தொடாத ஒரு சமூக அக்கறை பத்தின விஷயம் இருக்கும். ஹாரர்க்குள்ள அந்த விஷயம் நிச்சயம் இருக்கும். அது நான் சொல்லவேண்டியதில்லை. நீங்க தியேட்டர்ல பாக்கும்போது உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிடும் என்றார் நடிகர் சதீஷ்.
இந்த படத்துல நடிக்கிற நம்ம ப்ரோ சித்தார்த்தை பத்தி சொல்லணும்னா, அவர் ஒரு விக்கிபீடியா. எல்லாத்தை பத்தியும் எல்லா டீடெய்லும் அவருக்கு தெரியுது. அதனால் அவர் கூட நம்ம நடிக்கும்போது, நம்மளும் புதுசா ஏதாவது கத்துக்கலாம்.
சித்தார்த் கிட்டே போய் நம்ம எதுவுமே கேட்கவேணாம். அவரை பேசவிட்டு நம்ம பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கலாம். மொத்தத்துல அன்னிக்கு பேப்பர் படிச்சது மாதிரி ஆகிடும். மொத்தத்துல சூட்டிங் ஸ்பாட்டுல அவர் ஒரு நடமாடும் விக்கிபீடியா. நம்ம போய் ஏதாவது ஒரு கருத்து கேட்டோமுன்னா, அவர் பாட்டுக்கு தகவலா கொட்டுவாரு. எல்லாத்தை பத்தியும் அவரோட பார்வை விரிவானதா இருக்கும்.
அருவம் படத்துல புதுசா ஒண்ணை சொல்லியிருக்கோம். நம்ம இதுக்கு முந்தி வந்த படத்துல எல்லாம், லஞ்சம், ஊழல்னு ஏதாவது ஒண்ணை பத்தி சொல்லியிருப்போம். இந்த படத்துல இது வரைக்கும் யாருமே தொடாத ஒரு சமூக அக்கறை பத்தின விஷயம் இருக்கும். ஹாரர்க்குள்ள அந்த விஷயம் நிச்சயம் இருக்கும். அது நான் சொல்லவேண்டியதில்லை. நீங்க தியேட்டர்ல பாக்கும்போது உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிடும் என்றார் நடிகர் சதீஷ்.


Click it and Unblock the Notifications











