நான் என்ன சொன்னேன்.. என்ன பண்ணி வச்சுருக்கீங்க.. ஷாக்கான ரசிகர்களுக்கு கோபி விளக்கம்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமியின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
இந்த சீரியலின் கதையோட்டத்திற்கு எப்படி பாக்கியா முக்கியமான காரணமாக அமைந்துள்ளாரோ அதேபோல கோபியும் நெகட்டிவ் கேரக்டரில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஞ்சித் இந்த தொடரின் முக்கியமான பழனிச்சாமி என்ற கேரக்டரில் தற்போது கதையில் அறிமுகமாகியுள்ளார்.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கணவன் கேட்ட விவாகரத்தை கொடுத்துள்ளார் பாக்கியா. தொடர்ந்து குடும்பத்திற்காக அடுத்தடுத்து தன்னை மெருக்கேற்றிக் கொண்டு வருகிறார். அடுத்தடுத்த கேட்டரிங் கான்டிராக்ட்கள் மூலம் வருமானம் பெற்றுவரும் பாக்கியா தற்போது கேன்டீனை தனியாக நடத்தும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

ஆங்கிலம் கற்கும் பாக்கியா
இந்தக்கதையில் ஆங்கிலம் தெரியாத பாக்கியாவை, அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்துகிறார் ராதிகா. இதையடுத்து இதை சேலஞ்சாக எடுத்துக் கொள்ளும் பாக்கியா, ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் வகுப்பில் இணைகிறார். அங்கு பழனிச்சாமி என்பலரை சந்திக்கிறார். இந்தக் கேரக்டரில் பிரபல நடிகர் ரஞ்சித் தற்போது இணைந்துள்ளார். அவர் தொடர்ந்து பாக்கியாவின் முயற்சிகளுக்கு கைக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவாலை ஏற்கும் பாக்கியா
இதனிடையே தன்னுடைய வீட்டில் தன்னுடைய குடும்பத்தினர் வசித்துவரும் நிலையில், அவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு கூறுகிறார் கோபி. இதை சேலஞ்சாக எடுத்துக்கொள்ளும் பாக்கியா, அவருக்கு ஒரு மாதத்தில் பணத்தை கொடுப்பதாகவும் இல்லையென்றால் வீட்டை காலி செய்வதாகவும் கூறுகிறார். முன்தொகையாக 2 லட்சம் ரூபாயையும் கொடுக்கிறார்.

வெறுப்பை சம்பாதிக்கும் கோபி கேரக்டர்
தன்னுடைய முதல் மனைவியின் வளர்ச்சி மற்றும் இரண்டாவது மனைவியின் பொறாமை உள்ளிட்டவற்றை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார் கோபி. இரண்டாவது மனைவி ராதிகாவின் பேச்சை கேட்டுக் கொண்டு, பாக்கியாவின் கேன்டீன் துவக்க விழாவிற்கு இனியா செல்வதையும் தடுக்கிறார். இந்த கோபி கேரக்டரில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கும்வகையில் தன்னுடைய கேரக்டரை சிறப்பாக செய்துவருகிறார் சதீஷ்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படும் சதீஷ், தொடர்ந்து பல்வேறு பதிவுகளை போட்டு வருகிறார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஞ்சித்தின் பழனிச்சாமி கேரக்டருக்கு சிறப்பான ஆதரவை ரசிகர்கள் அளிக்க வேண்டும் என்றும் தான் ஓய்வு எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அவர் இந்தத் தொடரிலிருந்து விலகப்போகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

சதீஷ் விளக்கம்
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தத் தொடரில் தன்னுடைய பார்ட் குறையும் என்று தான், தான் கூறியதாகவும் அது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்தத் தொடர் இந்த அளவிற்கு ரீச் ஆகியுள்ளதற்கு ரசிகர்கள், சேனல் மற்றும் சீரியலின் இயக்குநர் ஆகியோரே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











