twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாலியா விளையாடி வீடியோ போட்ட சதீஷ்.. அசிங்கப்படுத்திய பிரேம்ஜி.. தேவையா இது?!

    |

    Recommended Video

    ஜாலியா விளையாடி வீடியோ போட்ட சதீஷ்

    சென்னை: நடிகர் சதீஷ் விளையாடும் வீடியோவை பார்த்த நடிகர் பிரேம்ஜி பதிலுக்கு ஒரு வீடியோவை போட்டு அசிங்கப்படுத்திவிட்டார்.

    நடிகர் சதிஷ், விஜய், தனுஷ் உட்பட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து வருகிறார். தமிழின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார்.

    அண்மையில்தான் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    "ஐ லவ் யூ".. அன்பையும் தந்துவிட்டு முதல் பதிவிலேயே மன்னிப்பும் கேட்ட லாஸ்லியா.. யார்கிட்ட தெரியுமா?

    வீடியோ

    வீடியோ

    இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினர். இந்நிலையில் இன்று ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றினார் சதீஷ்.

    விளையாடும் வீடியோ

    அதாவது தூரத்தில் இருந்தப்படி ஒரு கோப்பையில் பேனா போன்ற எதையோ எரிகிறார். அது சரியாக அந்த கோப்பைக்குள் விழுகிறது. இதையே பின்பக்கமாக திரும்பி தூக்கியெறிகிறார் சதீஷ். அதுவும் சரியாக அந்த கோப்பைக்குள் விழ, தனது ட்ரேட் மார்க் டான்ஸ் ஸ்டெப்பை போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

    அசிங்கப்படுத்திய பிரேம்ஜி

    சதீஷின் இந்த வீடியோவை பாரத்த நடிகர் பிரேம்ஜி, டிக்டாக் ஆப்பில் இருந்து அதேபோன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். சதீஷ் செய்த ட்ரிக் பிரேம்ஜியின் வீடியோவை பார்த்தாலே புரிகிறது. இப்படி ஒரு வீடியோவை போட்டு சதீஷை ஒரே நிமிடத்தில் அசிங்கப்படுத்திவிட்டார் பிரேம்ஜி.

    சிரிக்கும் இமோஜிகள்

    இருவரின் வீடியோவையும் பார்த்த நடிகை கஸ்தூரி சிரிக்கும் இமோஜிகளை பதிவிட்டு ரியாக்ட் செய்துள்ளார்.

    பாயிண்ட் போட முடியாது

    சதீஷ் செய்த வேலையை கண்டுபிடித்த நெட்டிசன்கள் மேல இருந்து போடுறவங்களுக்கு எல்லாம் பாயிண்ட் போட முடியாது என கூறியுள்ளனர்.

    English summary
    Actor Sathish filed a playing video in his twitter page. But actor Premgi posted real trick of the video and insulted him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X