உங்க கேர்ள்பிரண்ட் பெயரை இப்போ ட்விட் பண்ணட்டுமா ப்ரோ .. கௌதம் கார்த்திக்கை கலாய்த்த சதீஷ்!
சென்னை : காமெடி நடிகர் சதீஷ் இளம் ஹீரோ கௌதம் கார்த்திக்கின் காதலியின் பெயரைக் குறிப்பிடவா என கிண்டலாக ட்விட்டரில் கேட்டுள்ளது வைரலாகி வருகிறது.
நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் தன்னை ட்விட்டர் பக்கத்தில் தன்னைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டதற்காக கேள்வி பதில் டாஸ்க் ஒன்றை வைத்தார்
அதில் அவரது ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்டு வர காமெடி நடிகர் சதீஷ் ஏடாகூடமாக ட்விட் செய்துள்ளது பலரையும் கலகலக்க வைத்துள்ளார். இது இப்பொழுது வைரலாகி வருகிறது.

கதாநாயகனாக அறிமுகம்
தமிழில் இளம் நடிகராக துடிப்புடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி வருபவர் கௌதம் கார்த்திக். பிரபல தமிழ் நடிகரான கார்த்திக்கின் மகனான இவர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

பல்வேறு வேடங்களில்
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்ட கௌதம் கார்த்திக் இன்று வரை படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி அனைவரும் அசந்து போகும் வகையில் பல்வேறு வேடங்களில் தன்னை ஈடுபடுத்தி நடித்து வருகிறார்.

1 மில்லியனை கடந்தது
இயக்குனர் அருண் சந்திரன் இயக்கிவரும் "செல்லப்பிள்ளை" படத்தில் நடித்து வரும் கௌதம் கார்த்திக் தன்னை ட்விட்டர் பக்கத்தில் பின் தொடரும் பாலோயர்ஸ்களின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்ததை கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்காக கேள்வி பதில் டாஸ்க்கைத் தொடங்கி அதில் அவரது ரசிகர்கள் சுவாரசியமான பல கேள்விகளை கேட்டு வர அதற்கு தயங்காமல் கௌதம் பதிலளித்து வந்தார்.

முழு நேர வேலையாக
இந்நிலையில் தமிழில் பிரபல காமெடி நடிகராக உள்ள சதீஷ் பிரபலங்களை கலாய்ப்பதையே முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கும் இவர், கௌதம் கார்த்திக்கின் இந்த பதிவை பார்த்துவிட்டு இப்போது ஏடாகூடமான கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கிறார்.

சிரிப்பு சிம்பலை மட்டும்
ரசிகர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை அதில் கேட்டு வர சதீஷ் "உங்க கேர்ள்பிரண்ட் பெயரை இப்போ ட்விட் பண்ணட்டுமா ப்ரோ " என கௌதமை மாட்டிவிடும் நோக்கில் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் அளிக்காமல் கௌதம் வெறும் சிரிப்பு சிம்பலை மட்டும் போட்டுவிட்டு அப்படியே நழுவி விட்டார்.

நீதான் தைரியமான ஆளாச்சே
கௌதம் கார்த்திக்கின் காதலி யார் என்பதை தெரிந்துகொள்ள ஆவலுடன் பலரும் காத்துக் கொண்டிருக்க சதீஷின் இந்த ட்விட் பதிவிற்கு பலரும் வடிவேலு பாணியில் " நீதான் தைரியமான ஆளாச்சே சொல்லித்தான் பாரேன்" என கலகலப்புடன் ரீட்விட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











