சின்னப்பிள்ளையாய் குதூகலிக்கும் பாக்கியலட்சுமி ஹீரோ.. ஆனா சீரியல்ல?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக உள்ளது பாக்கியலட்சுமி. டிஆர்பியிலும் இந்த தொடர் மாஸ் காட்டி வருகிறது.
இந்தத் தொடரில் மூன்று முக்கியமான கேரக்டர்களையும் அவர்களது வாழ்வியல் சிக்கல்களையும் கதைக்களமாக வைத்து சிறப்பான எபிசோட்களை தந்து வருகிறார் இயக்குநர்.
இந்த சீரியலில் ஆன்டி ஹீரோவாக கோபி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகர் சதீஷ். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடர்ந்து முதன்மை பெற்றுள்ளது. இந்தத் தொடரில் கோபி -பாக்கியா -ராதிகா என முதன்மை கேரக்டர்கள் மற்றும் அவர்களை சுற்றிய துணை கேரக்டர்கள் என கதைக்களத்தை குழப்பாமல் இப்போது பார்க்கத் துவங்கினாலும் கதை புரியும் வகையில் சீரியல் கதையை அமைத்து அனைவரையும் கவர்ந்துள்ளார் இயக்குநர். திருமணமாகி குழந்தை பிறக்கும் தருவாயில் உள்ள மகனை வைத்துக் கொண்டு, தன்னுடைய பழைய காதலை புதுப்பிக்கிறார் கோபி.

பழனிச்சாமி கேரக்டர்
அதையொட்டி அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், கோபியின் இரண்டாவது திருமணம், அதையொட்டிய பிரச்சினைகளை சிறப்பாக காட்சிப்படுத்தி வருகிறது தொடர். ஆனாலும் ஒரு சில காட்சிகள், சம்பவங்கள் ஒரே மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்த நிலையில், தற்போது பழனிச்சாமி என்ற கேரக்டரை தொடரில் புகுத்தியுள்ளார் இயக்குநர். இந்த கேரக்டரில் பிரபல நடிகர் ரஞ்சித் இணைந்துள்ளார்.

கடுப்பாகும் கோபி
தான் விவாகரத்து செய்த மனைவியாக இருந்தாலும் மற்றொருவருடன் சிரித்து பேசுவதை பொறுக்க முடியவில்லை கோபிக்கு. அதையொட்டி அவர் குடித்துவிட்டு வருவதும், அதனால் ராதிகாவுடன் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் என அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன. இதனிடையே, கோபி இந்த தொடரிலிருந்து விலகுகிறாரா என்ற செய்தியும் பரவியது. ஆனால் இதை மறுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் சதீஷ்.

வில்லத்தனம் + அப்பாவித்தனம்
அடுத்தடுத்து இந்தத் தொடரில் தன்னுடைய வில்லத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் ஒருசேர கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் சதீஷ். தன்னுடைய மனைவியிடம் ஆக்ரோஷத்தை காட்டும் சதீஷ், அவர் தன்னுடைய வீட்டை கட்ட தான் செலவழித்த தொகையை திருப்பித் தர வேண்டும் அல்லது வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறார். இதையடுத்து தான் வீட்டிற்காக செலவழித்தத் தொகையை திருப்பித் தருவதாக சபதம் செய்யும் பாக்கியா, தற்போது அதில் 2 லட்சம் ரூபாயையும் திருப்பிக் கொடுத்துள்ளார்.

திருமணத்தால் மாறிய வாழ்க்கை
இதனிடையே தான் காதலித்து திருமணம் செய்த ராதிகாவிடம் குழையும் கோபி, அவர் செய்யச் சொல்லும் வேலைகளையும் அழுதுக் கொண்டே செய்து முடிக்கிறார். தன்னுடைய முதல் திருமண வாழ்க்கையில், பாக்கியாவே எல்லா வேலைகளையும் செய்துவந்த நிலையில், ராஜா போலவே வாழ்க்கையை என்ஜாய் செய்து வந்தார். ஆனால் தற்போது பால் வாங்குவதில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்யும் நிலைக்கு மாறியுள்ளார் கோபி.

சந்தோஷ வீடியோ பகிர்ந்த கோபி தாத்தா
இதனிடையே தற்போது தான் சந்தோஷமாக, கேட்டில் இருந்தபடியே விளையாடும் வீடியோவை கோபி பகிர்ந்துள்ளார். அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனில் கோபி தாத்தா, சந்தோஷமாக வாழ்வதாக தெரிவித்துள்ளார். மேலும் கூடுக்குத்தான் வயது, மனதிற்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனக்கு வயதாகிவிட்டதால், சீரியலில் தன்னுடைய கேரக்டரின் அளவு குறைந்துள்ளதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











