தளபதி விஜய்யின் அரிய புகைப்படத்தை ஷேர் செய்த சதீஷ்.. எல்லாம் அந்த போட்டோ சவாலுக்காகத் தானாம்!

சென்னை: காமெடியன் டு ஹீரோவாக மாறியுள்ள நடிகர் சதீஷ் பைரவா ஷூட்டிங் சமயத்தில் விஜய் உடன் கார் டிரைவிங் சென்ற போது எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

கிரிக்கெட் வீரரும் கோலிவுட்டின் அறிமுக ஹீரோவுமான ஹர்பஜன் சிங் போட்ட கார் டிரைவ் போட்டோவிற்கு பதிலடியாக இதனை சதீஷ் ஷேர் செய்துள்ளார்.

நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சதீஷ் அடுத்த ஆண்டு அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

ஆரம்பித்து வைத்த ரெய்னா

ஆரம்பித்து வைத்த ரெய்னா

வீக்கெண்ட் வைப்ஸ் என சுரேஷ் ரெய்னா காருக்குள் இருந்தபடி போஸ் கொடுத்து ஒரு போட்டோவை போட்டு வைரலாக்கி உள்ளார். அதை பார்த்த ஜான்டி ரோட்ஸ் என்னுடைய ரயில் பயணத்தை விட உங்க ரைடு சிறப்பானது அல்ல என ரெய்னாவை கலாய்த்து ஒரு புகைப்படம் வெளீயிட்டுள்ளார்.

காருக்குள் ஜோரா

காருக்குள் ஜோரா

கிரிக்கெட் வீரரும் பிரண்ட்ஷிப் படத்தின் ஹீரோவுமான ஹர்பஜன் சிங் சொகுசு காருக்கு ஜாலி ரைடு போகும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து "My ride isn't that bad" என கெத்துக் காட்டி போஸ் கொடுத்து அதனை சுரேஷ் ரெய்னாவுக்கும் ஜான்டி ரோட்ஸுக்கும் டேக் செய்து நான் தான் உங்க ரெண்டு பேரை விட ராஜபோகமாக ரைடு போகிறேன் என வெறுப்பேற்றி உள்ளார்.

சதீஷின் வாத்தி ரெய்டு

சதீஷின் வாத்தி ரெய்டு

உங்க ரைடு எல்லாம் ஒன்றும் பிரமாதம் அல்ல இது தான் என்னோட சிறந்த ரைடு என தளபதி விஜய் உடன் காரில் நகர்வலம் செல்லும் அரிய புகைப்படத்தை ஷேர் செய்து தளபதி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். பைரவா படப்பிடிப்பு சமயத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சண்டைக்கு வழிவகுத்த சதீஷ்

சண்டைக்கு வழிவகுத்த சதீஷ்

வழக்கம் போல ரசிகர்களின் மோசமான ட்விட்டர் சண்டைக்கு இப்படியொரு போட்டோவை போட்டு வழிவகுத்து விட்டார் நாய் சேகர் பட ஹீரோ சதீஷ். தளபதி விஜய்யின் ரேர் போட்டோவை ஷேர் செய்ததற்கு ரசிகர்கள் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

சன்னிலியோன் படத்தில்

சன்னிலியோன் படத்தில்

நாய் சேகர் படத்தில் நாயகனாக நடித்து வரும் சதீஷுக்கு குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லக்‌ஷ்மி ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்ததாக சன்னி லியோனின் பேய் படமான ஓ மை கோஸ்ட் படத்திலும் சதீஷ் நடித்து வருகிறார். இந்த பக்கம் தர்ஷா குப்தா அந்த பக்கம் சன்னி லியோன் என பயங்கர பிசியாக நடித்து வருகிறார் சதீஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X