கல்யாணம் ஆன கையோடு புது மாப்பிள்ளைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. சதீஷ் ஹேப்பி அண்ணாச்சி!

Recommended Video

Darbar Trailer | Rajinikanth | Basha Rerelease | kathi - Tea vadai peachi

சென்னை: நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இன்று திருமணம் நடந்த நிலையில் அவருக்கு ஒரு பெரும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். ஜெர்ரி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான சதீஷ், முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்திருக்கிறார்.

தனது டைமிங் சென்ஸ் மற்றும் ஹியூமர் சென்ஸால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் சதீஷ். இந்நிலையில் சதீஷுக்கு இன்றுதான் திருமணம் முடிந்தது.

சதீஷ் திருமணம்

சதீஷ் திருமணம்

சிக்ஸர் படத்தின் இயக்குநர் சாச்சினின் தங்கை சிந்துவை இன்று இந்து முறைப்படி கைப்பிடித்தார் சதீஷ். இதில் திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பிரபலங்கள் பங்கேற்பு

பிரபலங்கள் பங்கேற்பு

நேற்று மாலை நடைபெற்ற சதீஷின் திருமண வரவேற்பிலும் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா, ஜீவி பிரகாஷ், சிவா, நடிகை ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

தலைவர் 168

தலைவர் 168

இந்நிலையில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் சதீஷுக்கு கல்யாண பரிசை அறிவித்து திக்குமுக்காடச் செய்திருக்கிறது. அதாவது, ரஜினியின் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 168 படத்தில் சதீஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

திக்குமுக்காடும் சதீஷ்

இதனை சன்பிக்சர்ஸ் நிறுவனமும் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் சதீஷ்.

நடிகைகள் குஷ்பு மீனா

நடிகைகள் குஷ்பு மீனா

ஏற்கனவே ரஜினியுடன் நடிகைகள் குஷ்புவும் மீனாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

அதேபோல் பிரகாஷ் ராஜ், சூரி என பெரிய பட்டாளமே தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் சதீஷும் தலைவர் 168ல் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X