முல்லைக்கு தேர் கொடுத்த பாரி.. புலிக்கு ‘பால்’ கொடுத்த சதீஷ்!

காமெடி நடிகர் சதீஷ் புலிக்கு பாலூட்டி, முத்தம் கொடுத்த வீடியோவை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

புலிக்கு உம்மா கொடுத்த சதீஷ்...!- வீடியோ

சென்னை: காமெடி நடிகர் சதீஷ் புலிக்கு பாலூட்டி, முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழ்படம் முதல் பாகத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சதீஷ், மதராசப்பட்டிணம் படம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து சதீஷ் செய்த காமெடிக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

Actor Sathish kisses a tiger

இதையடுத்து தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார் சதீஷ். சமீபத்தில் வெளியான தமிழ்படம் 2ல் வில்லனாக நடித்து, கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை எல்லா வில்லன்களை புரட்டி எடுத்த சதீஷிக்கு படத்தில் 15 கெட்டப்புகள்.

நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும், டிவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் சதீஷ். சக நடிகர்கள் போடும் போஸ்டுகளுக்கு கமெண்ட் அடித்து, ராவடி செய்வதும் அவரது வேலை.

#InternationalTigerDay

A post shared by Sathish Muthu Krishnan (@samathusathish) on

இந்நிலையில் நேற்று உலக புலிகள் தினத்தையொட்டி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார் நடிகர் சதீஷ். அதில் ஒரு புலிக்குட்டியை மடியில் வைத்துக்கொண்டு பாலூட்டும் அவர், அதற்கு முத்தமும் கொடுக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர் ஒருவர், 'முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, புலிக்கு பால் கொடுத்தான் சதீஷ்' எனக் கமெண்ட் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X