For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பீஸ்ட் படத்தில் இணைந்த பிரபல இளம் நடிகர்.. லேட்டஸ்ட் அப்டேட்!

  |

  சென்னை : நடிகர் விஜய்யின் நடிப்பில் அதிரடியாக உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இரண்டு கட்டங்களாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

  நீண்ட இடைவேளைக்கு பிறகு பீஸ்ட் படத்தின் மூலம் நடிகை பூஜா ஹெக்டே கம்பேக் கொடுக்க யோகி பாபு,விடிவி கணேஷ், செல்வராகவன், டான்ஸிங் ஷபீர், அபர்ணா தாஸ் என பலர் இதில் நடித்து வருகின்றனர்.

  இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இன்னும் சில தினங்களில் டெல்லி செல்ல உள்ள நிலை இப்படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இளம் நடிகர் ஓருவர் நடிக்க உள்ளார்.

  காசு தான் முக்கியம்.. கதை பற்றி கவலை இல்லை.. என்ன வெரைட்டி நடிகர் இப்படி இறங்கிட்டாரே?காசு தான் முக்கியம்.. கதை பற்றி கவலை இல்லை.. என்ன வெரைட்டி நடிகர் இப்படி இறங்கிட்டாரே?

  பீஸ்ட்

  பீஸ்ட்

  விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டார் இந்திய அளவில் வசூலில் மிகப்பெரிய சாதனையை செய்திருக்கும் நிலையில் அதைத் தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அடுத்த படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பீஸ்ட் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. டைட்டிலுக்கு ஏற்றபடியே அதிரடியாக படம் உருவாகி வருகிறது. சிம்பு நடிப்பில் உருவாக இருந்த வேட்டை மன்னன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருந்த நெல்சன் திலீப் குமாருக்கு அந்த திரைப்படம் கைகூடாமல் போக அதன் பிறகு நயன்தாரா மற்றும் யோகி பாபுவின் கலக்கல் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். கோலமாவு கோகிலா மிகப்பெரிய வெற்றி பெற்றது. முழுக்க காமெடியாக தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுமையான கதை களத்தில் உருவான இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். மேலும் இப்படத்தில் அனிருத்தின் இசை மற்றும் சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் என அனைத்தும் மிக சிறப்பாக அமைந்து படம் வேற லெவல் ஹிட்டடித்தது. இப்பொழுது கோல மாவு கோகிலா ஹிந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

  ஓடிடியில் நேரடியாக ரிலீஸ்

  ஓடிடியில் நேரடியாக ரிலீஸ்

  முதல் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நெல்சன் தனது நீண்ட நாள் நண்பரான சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுகிறது என்ற செய்தி வெளியாகி இருந்தது . பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் திடீரென ஓடிடியில் வெளியாகிறது என்ற செய்தியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பொழுது திரையரங்குகளில் வெளியிடலாம் என படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.

  ஓடிடியில் நேரடியாக ரிலீஸ்

  ஓடிடியில் நேரடியாக ரிலீஸ்

  ஆகஸ்ட் 23ம் தேதியிலிருந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீத இருப்பவர்களுடன் படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்க இதுதான் சரியான தருணம் என்ன டாக்டர் ஓடிடி தேதியை தள்ளி வைத்துவிட்டு திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர் . டாக்டரில் சிவகார்த்திகேயன் டாக்டராக நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதில் நடிகை பிரியங்கா அருள்மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் நானி நடிப்பில் கேங் லீடர் என்ற வெற்றிப் படத்தில் நடித்துள்ளார் அதன்பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு இருக்க டாக்டர் படத்திற்கு பிறகு தமிழில் மீண்டும் சிவகார்த்திகேயன் இயக்கத்தில் டான் மற்றும் சூர்யாவின் நடிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

  தமிழில் ரீ என்ட்ரி

  தமிழில் ரீ என்ட்ரி

  கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா வெறித்தனமாக இணையதளத்தை தெறிக்க விட்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு தாறுமாறு செய்து வருகிறது. முகமூடி படத்திற்கு பிறகு பல வருடங்களாக தமிழ் சினிமாவின் பக்கம் எட்டிக்கூட பார்க்க நடிகை பூஜா ஹெக்டே நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக அளவில் கூட்டியுள்ளது.

  நடிகராக செல்வராகவன் அறிமுகம்

  நடிகராக செல்வராகவன் அறிமுகம்

  இதுவரை இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இயக்குனர் செல்வராகவன் சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராகவும் இப்பொழுது அறிமுகமாக இருக்க அதைத்தொடர்ந்து பீஸ்ட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதிரடியான ஆக்ஷன் படமாக உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் இரண்டு கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்துள்ள நிலையில் 3-வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு நண்பனாக நடிகர் யோகி பாபு நடித்த காட்சிகள் கடந்த இரண்டு வாரங்களாக எடுக்கப்பட்டுள்ளது. விஜய் மற்றும் யோகிபாபுவுக்கு இடையேயான காட்சிகள் மிகப் பிரமாதமாக வந்துள்ளது என கூறப்படுகிறது . இதையடுத்து மூன்றாம் கட்ட படிப்புக்காக படக்குழு இன்னும் சில தினங்களில் டெல்லி செல்ல உள்ளது. யோகி பாபு, செல்வராகவன் ஆகியோரைத் தொடர்ந்து விடிவி கணேஷ்,மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, டான்சிங் ரோஸ் ஷபீர் என மூன்று வில்லன்கள் இதில்நடித்து வருவதாக கூறப்படுகிறது.

  முக்கிய வேடத்தில் சதீஷ்

  முக்கிய வேடத்தில் சதீஷ்

  இவர்களுடன் யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃப்ரூக்கி, நடிகை அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் நடிகரும் நடன இயக்குனருமான சதீஷ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சதீஷ் விஜய்யுடன் இணைந்து ஏற்கனவே தலைவா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்பொழுது பீஸ்ட் படத்திலும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது .

  English summary
  Actor Sathish Krishnan joins vijay beast movie
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X