அச்சுஅசல் நித்தியானந்தா.. நடிகர் சதீஷ் வேற லெவல்.. போட்டோவை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகர் சதீஷ் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். எந்த விவகாரம் என்றாலும் அவரது பாணியில் கலாய்ப்பது கிண்டலடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக உள்ள நடிகர் சதீஷ், பிக்பாஸ், மழை, கவின், லாஸ்லியா என யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் தன்பாட்டுக்கு அடித்து விடுவார்.
ரசிகர் கூட்டம்
அவ்வப்போது நகைச்சுவை வீடியோக்களை போட்டும் நெட்டிசன்களிடம் மொக்கை வாங்குவார் சதீஷ். அவரது வித்தியாசமான போட்டோக்களையும் வீடியோக்களையும் ரசிப்பதற்கு ஒரு கூட்டமே உள்ளது.

கலக்கும் நித்தியானந்தா
இந்நிலையில் தனி நாடு, குடிமக்கள், அரசங்கம், அதிபர் என நாட்டையை கலக்கி வரும் சாமியார் நித்தியானந்தாவை வச்சு செய்திருக்கிறார் நடிகர் சதீஷ். நித்தியானந்தா போலவே கழுத்தில் ருத்ராட்ச மாலை, காவி உடை, தலையில் முண்டாசு, நெற்றியில் நித்தியானந்தா ஸ்டையில் பட்டை பொட்டு என அசத்தியிருக்கிறார் சதீஷ்.

நித்தி கெட்டப்
சட்டென பார்ப்பதற்கு நித்தியானந்தாபோலவே இருக்கிறார் சதீஷ். சதீஷின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. சதீஷின் நித்தியானந்தா கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சதீஷானந்தா
இனி நீங்க சதீஷானந்தா என்று அழைக்கப்படுவிர்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஒரு நிமிஷம் ஷாக்காயிட்டேன்
ஒரு நிமிஷம் ஷாக்காயிட்டேன் நம்ம நித்யானந்தாவான்னு சேம் சேம் வெல் ப்ரோ.. என்கிறார் இவர்.
இங்கேயும் வந்துட்டீங்களா?
மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
கைலாசா விசா கிடைத்துவிட்டதா?
தெய்வமே உனக்கும் அந்த கைலாசா விசா கிடைத்துவிட்டதா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
சாமிஜி போலவே இருக்கீங்க
சதீஷ் அண்ணா.. பார்த்து இருங்க.. உங்கள கைது பண்ணிட போறாங்க.. உண்மையில பார்க்குறதுக்கு சாமிஜி போலவே இருக்கீங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஒரு விசிட் அடிங்க
அருமை... அப்படியே அந்த தீவுக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு வாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











