வாடி செல்லம்... வாடி செல்லம்... லவ் யூ டி... சதீஷ் இப்படி ஒருத்தர கொஞ்சிருக்காரு! யாருன்னு பாருங்க!
சென்னை: சென்னைக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த மழையை நடிகர் சதீஷ் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்காத குறையாக கொஞ்சியுள்ளார்.
சென்னையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இன்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை நகர் முழுவதும் இதமான சூழல் நிலவி வருகிறது.

வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னையை குளிர்வித்த இந்த மழையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். மழை வருகிறது என மரத்துக்கடியிலும் சாலையோரக் கடைகளிலும் மக்கள் இன்று ஒதுங்கவில்லை.
மாறாக எங்கு பார்த்தாலும் நனைந்தபடியே சென்றனர். டிவிட்டரிலும் சென்னை ரெய்ன்ஸ் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாகியுள்ளது. சென்னை ரெய்ன்ஸ் என மக்கள் தங்களின் பகுதிகளில் பெய்து வரும் மழை குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மழையை கண்டதும் நடிகர் சதீஷுக்கு ஒன்றும் புரியவில்லை. நீண்ட நாள் காதலியை பார்த்து கொஞ்சுவது போல வாடி செல்லம்.. வாடி செல்லம்.. லவ் யூ டி என டிவிட்டியுள்ளார்.
சென்னை மாநகரை மட்டும் அல்ல சென்னை மக்களையும் ஆறு மாதங்களுக்கு மேலாக காயப்போட்ட மழையை திடீரென கண்டதும் யார்தான் இப்படி கொஞ்ச மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications











