மனோபாலாவை வைத்து காமெடிக்கு ட்ரை செய்த பிரபல நடிகர்.. பிடி பிடியென பிடித்த நெட்டிசன்களால் ஓட்டம்!

சென்னை: நடிகர் மனோபாலாவின் போட்டோவை பார்த்து பிரபல நடிகர் ஒருவர் மரண கலாய் கலாய்த்துள்ளார். ஆனால் அவரையும் நெட்டிசன்கள் கலாய்த்ததால் டிவிட்டை டெலிட் செய்துவிட்டு ஓட்டம் பிடித்துவிட்டார்.

நடிகர் மனோபாலா முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ளார். இளம் நகைச்சுவை நடிகர்களுக்கு போட்டியாக காமெடி செய்து வருகிறார் நடிகர் மனோபாலா.

எவ்வளவு அடிச்சாலும் உங்களுக்கு தான் வலிக்கும் என்ற ரீதியில் அவர் கொடுக்கும் ரியாக்ஷனுக்கும் அவரது பாடி லாங்குவேஜை ரசிக்கவுமே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அந்தளவுக்கு எதார்த்தமாக காமெடி செய்து வருகிறார்.

முதல் ஆளாக

முதல் ஆளாக

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மிரட்டும் வில்லனாகவும் நடித்து வருகிறார் மனோபாலா. எப்போதும் டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா, சக நண்பர்கள் யாருக்காவது பிறந்தநாள், திருமணம் என என்ன நடந்தாலும் தவறாமல் முதல் ஆளாக வாழ்த்து கூறி விடுவார்.

நடிகர்களுடன்

நடிகர்களுடன்

இதேபோல் நடிகர்களின் படம் ரிலீஸ், ட்ரெயிலர் ரிலீஸ், போஸ்டர் ரிலீஸ் என்றாலும் மறக்காமல் வாழ்த்து கூறி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகர்களுடன் எடுக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் நடிகர் மனோ பாலா.

தெரிந்தே செய்திருக்கிறார்

தெரிந்தே செய்திருக்கிறார்

அதோடு தானும் விதமாக எடுக்கும் போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு என்டெர்டெய்ன் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை போட்டு சின்னாபின்னமாகி வருகிறார் மனோ பாலா. இந்த போட்டோவை ஷேர் செய்தால் நிச்சயம் கலாய்ப்பார்கள் என்று தெரிந்தே அப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.

நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ்

அதாவது, ஒரு இளைஞரை போல் உடை உடுத்திக்கொண்டு தம்ப்ள்ஸ் எடுக்கிறார் மனோ பாலா. அவரது அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இப்படிதான் என்றில்லாமல் தாறுமாறாய் கலாய்த்து வருகின்றனர். மனோ பாலாவின் போட்டோவை பார்த்த நகைச்சுவை நடிகர் சதீஷ் பங்கமாய் கலாய்த்திருந்தார்.

பந்துதான் அவரை..

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அவர் பந்தை பிடிக்கவில்லை.... பந்து தான் அவரைப் பிடித்திருக்கிறது மொமென்ட் என தெவித்திருந்தார். ஆனால் அவரது கமென்ட்டை பார்த்த நெட்டிசன்கள் சிலர் இதெல்லாம் காமெடியா என பதிலுக்கு அவரையும் கலாய்த்தனர். என்ன நினைத்தாரோ சதீஷ், திடீரென தனது டிவிட்டை டெலிட் செய்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X