அடடே!.. அஜித் மனைவி ஷாலினி பக்கத்தில் யாரு இருக்கான்னு பாருங்க.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்கா?
சென்னை: நடிகை ஷாலினியுடன் நடிகர் சதீஷ் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு அஜித் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.
நண்பர் சிவகார்த்திகேயனை போலவே சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையுடன் காமெடி நடிகர் சதீஷ் சமீபகாலமாக தொடர்ந்து புதிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
நகைச்சுவை நடிகர்களான சந்தானம், யோகி பாபு, விஜய் டிவி புகழ், சூரி உள்ளிட்ட பலரும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் நடிகர் சதீஷும் அந்த ரூட்டை பிடித்துள்ளார்.

ஹீரோவான சதீஷ்: நாய் சேகர், சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படங்களில் ஹீரோவாக நடித்த சதீஷ், அடுத்ததாக வித்தைக்காரன் மற்றும் காஞ்சுரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரெஜினா கசாண்ட்ரா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பேய் காமெடி படமாக உருவாகியுள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படம் இந்த மாதம் ரிலீசாக உள்ளது.
ஷாலினியுடன் சந்திப்பு: இந்நிலையில் தற்போது, நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியுடன் நடிகர் சதீஷ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த என் அன்பு அக்கா ஷாலினியை சந்திக்கத் கிடைத்த வாய்ப்பு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. அஜித் சாரை போலவே இவங்களும் ரொம்ப அன்பானவங்க என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
காஞ்சுரிங் கண்ணப்பன் படத்திற்கு வாழ்த்துகளை பெற ஷாலினியை நடிகர் சதீஷ் சந்தித்தாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். மேலும், நீங்களாவது விடாமுயற்சி அப்டேட்டை வாங்கி கொடுங்க சதீஷ் ப்ரோ என ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
விடாமுயற்சி அப்டேட்: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் ஆஜர்பைஜானில் உள்ள நிலையில், படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும், இன்னமும் லைகா நிறுவனம் விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பமானது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் குறித்த காஸ்டிங் அப்டேட்டிங்கையும் வெளியிடவே இல்லை.
நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருவதாகவும் மேலும், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் என்றும் லியோ படத்தில் வில்லன்களாக நடித்த சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











