புரோ.. அடுத்து கயிறு மேல நடக்க போறாரு.. பேஸ்கெட் பால் விளையாடிய நடிகர் சதீஷ்.. பங்கம் செய்த ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் சதீஷ் பேஸ்கெட் பால் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவின் டாப் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஃபிரண்ட்ஷிப் படம்

ஃபிரண்ட்ஷிப் படம்

நடிகர் சதீஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. தற்போது ஹர்பஜன் சிங், லாஸ்லியா, அர்ஜுன் அகியோர் நடிக்கும் ஃபிரண்ட் ஷிப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ

ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது லாஸ்லியாவின் தீவிர ஃபேனாக இருந்தார் சதீஷ். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சதீஷ் அவ்வப்போது தனது நகைச்சுவை வீடியோக்களையும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

பேஸ்கெட் பால்

பேஸ்கெட் பால்

அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்துள்ளனர். அதில் பேஸ்கெட் பால் விளையாடுகிறார் சதீஷ் சரியாக கோல் போட்டு அதனை கொண்டாடுகிறார். கைகளால் மட்டுமின்றி கால்களாலும் பாலை தூக்கிப்போட்டு கோல் போடுகிறார்.

ஏற்கனவே கோல்மால்

ஏற்கனவே கோல்மால்

இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சதீஷ், அடடே ஆச்சரியக்குறி என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஏற்கனவே இதுபோன்று ஒரு முறை பேனாவை தூக்கிப் போட்டு கோல்மால் செய்தார் சதீஷ் அதனை நடிகர் பிரேம்ஜியும் ஆர்யாவும் அம்பலப்படுத்தினர்.

கயிறுமேல நடக்கப் போறாரு

கயிறுமேல நடக்கப் போறாரு

இந்நிலையில் சதீஷ் ஷேர் செய்திருக்கும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதிலும் ஏதாவது கோல்மால் இருக்கிறதா என கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், புரோ அடுத்து கயிறு மேல நடக்கப் போறாரு.. கைத்தட்டி உற்சாகம் படுத்துங்க என கிண்டலடித்துள்ளனர்.

நம்ம வரலாறு அப்படி

நம்ம வரலாறு அப்படி

மேலும் நீங்க தான் அந்த வெளியூர் ஆட்டக்காரரா என வடிவேலு போட்டோவை போட்டு கலாய்த்துள்ளனர். இந்த நெட்டிசன், இதுல என்ன திருட்டுத்தனம் இருக்கும்னு தான் யோசிக்க முடியுது. உங்களை நம்ப முடியலையே பாஸ். நம்ம வரலாறு அப்படி.. என பங்கம் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X