என்ன சார் இது ஓகே வா.. சதீஷ் வெளியிட்ட லேடி கெட்டப் போட்டோ.. அட கருமமே!

நடிகர் சதீஷ் இயக்குனர் பார்த்திபனை கிண்டல் செய்து போட்டிருக்கும் டிவிட் ஒன்று இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

சென்னை: நடிகர் சதீஷ் இயக்குனர் பார்த்திபனை கிண்டல் செய்து போட்டிருக்கும் டிவிட் ஒன்று இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காப்பான் மற்றும் ஒத்த செருப்பு இரண்டு படங்களும் வெளியானது. பார்த்திபனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி உள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.

இந்த படத்தில் நல்ல கதை இருக்கிறது. படத்தில் இருக்கும் திரில் அம்சத்தால் இதை பலர் புகழ்ந்து தள்ளி இருந்தனர்.

எப்படி இருக்கிறது

எப்படி இருக்கிறது

இதில் நிறைய வித்தியாசமான டிவிஸ்ட் காட்சிகள் உள்ளது. பார்த்திபன் நடிப்பு நன்றாக உள்ளது என்று விமர்சனங்கள் வருகிறது. ஒத்த செருப்பு சைஸ் 7 படம் பட்ஜெட் தொகையை விட அதிகமாக வசூலிக்கும். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் எல்லோருக்கும் இந்த படத்தின் மூலம் லாபம் என்று கூறுகிறார்கள்.

என்ன வைரல்

என்ன வைரல்

இந்த நிலையில் தற்போது பார்த்திபன் தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இதற்காக அவர் ஹீரோயின் ஒருவரை தேடி வருகிறார். ஆம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய படத்தை அவர் இயக்க முடிவு செய்துள்ளார்.

என்ன டிவிட்

இது தொடர்பாக பார்த்திபன் செய்துள்ள டிவிட்டில், வணக்கம்! அடுத்தது பற்றி நிறைய ஓடுகிறது மனதில்,அதில் ஒரு ஸ்கிரிப்டுக்கு பிட்னஸ் பைத்தியமான 25 வயது பெண் (சிரித்தால்... சில பசங்களையாவது சீரியஸாக்கி
ஐசியூ- க்கு அனுப்பக்கூடிய) நடித்து அனுபவமுள்ளவர் தேவை. என்று கூறி, தொடர்புக்கு ஒரு மொபைல் எண்ணை கொடுத்து இருக்கிறார்.

பதில்

இந்த நிலையில் இதற்கு நடிகர் சதீஷ் மிகவும் காமெடியாக பதில் அளித்துள்ளார். அதில் என்ன சார் ஓகே வா என்று கேட்டு தன்னுடைய லேடி கெட்டப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் இந்த தோற்றத்தில் பார்க்க உண்மையில் ஐசியூவிற்கு அனுப்ப கூடிய அளவிற்கு அழகாக இருக்கிறார் என்று கூறலாம்.

என்ன பதில்

இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன் ஒருவர், இவ்ளோ செலவு பண்ணி கெட்டப் போட்டது ஓகே , ரெண்டு ரூவாய்க்கு பிளேடு ஒன்னு வாங்கி நெஞ்சு முடி எடுத்துருக்கலாம், என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X