கைலாசா நாட்டுக்கு எப்படி விசா வாங்குறது.. கிரிக்கெட் வீரர் அஷ்வின் - நடிகர் சதீஷ் கலகல கான்வெர்சேஷன்

Recommended Video

Complaint against Nithyanandha | லிங்கம் எங்கே..விசாரணையில் குதித்த போலீஸ்..சிக்கலில் நித்யானந்தா

சென்னை: கைலாசா நாட்டுக்கு எப்படி விசா வாங்குவது என்று கேட்ட கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு நடிகர் சதீஷ் அசத்தலாக பதில் அளித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார் நித்தியானந்தாவை குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைது செய்ய குஜராத் போலீசார் பொறி வைத்து காத்திருக்கின்றனர்.

இதனால் தலைமறைவான நித்தியானந்தா, ஆன்லைனில் சொற்பொழிவாற்றி வந்தார். போதா குறைக்கு போலீசாரையும் மரண கலாய் கலாய்த்து வந்தார்.

 அதிபரான நித்தியானந்தா

அதிபரான நித்தியானந்தா

இந்நிலையில் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ள நித்தியானந்தா, அந்த தீவில் தனது சிஷ்யைகளுடன் தப்பிவிட்டார். அதோடு அந்த தீவை கைலாசா என தனி நாடாக அறிவித்துள்ள நித்தி, அந்த நாட்டிற்கு தன்னை அதிபராக அறிவித்திருக்கிறார்.

பாஸ்போர்ட் விசா

பாஸ்போர்ட் விசா

மேலும் தனது நாட்டிற்கு தனி கொடியை அறிமுகப்படுத்தியிற்கும் நித்தியானந்தா, தெனது நாட்டிற்கு வர வேண்டும் என்றால் பாஸ்போர்ட், விசா பெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

சொல்கிறேன் பக்தா

இந்நிலையில் அவரை கிண்டலடிக்கும் வகையில் கிரிக்கெட் வீரர் அஷ்வின், கைலாசா நாட்டுக்கு விசா எப்படி வாங்குவது? அல்லது அங்கு போய் இறங்கியவுடன் விசா பெறுவதா என்று கேட்டுள்ளார். அதனை பார்த்த நடிகர் சதீஷ், நித்தியானந்தா போல் வேடமிட்டு சொல்கிறேன் பக்தா என கூறியுள்ளார்.

அள்ளும் லைக்ஸ்

சதீஷின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கும் நித்தியானந்தாவுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை என்று கூறியுள்ளனர். சதீஷின் அந்த போட்டோ லைக்ஸை அள்ளி வருகிறது.

பிரச்சனையில்லை

பிரச்சனையில்லை

நெட்டிசன் ஒருவர் அஷ்வினிடம், போயிட்டு வர போறீங்களா? இல்ல அங்கேயே குடியுரிமை வாங்க போறீங்களா என கேட்டதற்கு, இரண்டு குடியுரிமைகள் வைத்திருப்பது இந்தியாவில் ஒரு பிரச்சனையில்லை என கூறியுள்ளார் அஷ்வின்.

ரசிகர்கள் குதூகலம்

ரசிகர்கள் குதூகலம்

அஷ்வின் கேள்விக்கு நடிகர் சதீஷ் நித்தியானந்த கெட்டப்பில் வந்து வாண்ட்டடாக பதில் அளித்ததை பார்த்த ரசிகர்கள் குதூகலித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X