உங்க இடத்தை நான் பார்த்துக்கட்டா.. சிவகார்த்திகேயனிடம் சதீஷ் கேள்வி.. GOAT-ல் நீக்கப்பட்ட காட்சி!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில் கேமியோ கேரக்டர்களிலும் அளவுக்கதிகமான நடிகர்களை இணைத்திருந்தார் வெங்கட் பிரபு.

படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்தார் திரிஷா. கிளைமாக்சில் நடிகர் சிவகார்த்திகேயனும் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் பிரேம்ஜி, அரவிந்த், வைபவ், வெங்கட் பிரபு என அவர்கள் கேங்கும் படத்தில் இணைந்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சதீஷும் இந்தப் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தது தெரியவந்துள்ளது.

vijay goat sathish

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. கேரளா, ஆந்திரா என விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளம் உள்ள மாநிலங்களிலும் இந்தப் படத்திற்கு அதிகமான வரவேற்பு காணப்படவில்லை. இருந்தபோதிலும் தமிழகத்தில் இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். தமிழகத்தில் மட்டுமே இந்தப் படம் 200 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாகவும் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் படம் 400 கோடிகளுக்கும் மேல் வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோட் படம்: இந்தப் படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்களை இணைத்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. படத்தின் கதைக்களம் வலுவாக இல்லாததும் அதிகமான நட்சத்திரங்கள் இருந்ததால் அவர்கள் அனைவரையும் நியாபகம் வைத்துக் கொள்வதில் சிரமம் இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்திருந்தனர். இவர்கள் மட்டுமில்லாமல் நடிகர்கள் பிரேம்ஜி, வெங்கட் பிரபு, வைபவ், அரவிந்த் என கேமியோ கேரக்டர்களில் வெங்கட்பிரபு கேங்கும் நடித்திருந்தனர்.

கேமியோ கேரக்டர்கள்: இவர்கள் மட்டுமில்லாமல் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட லீட் நடிகர்களும் இந்தப் படத்தில் கேமியோ கேரக்டர்களில் நடித்திருந்தனர். திரிஷா விஜய்யுடன் இணைந்து மட்ட பாடலுக்கு சூப்பரான குத்தாட்டம் போட்டிருந்தார். இதேபோல நடிகர் சிவகார்த்திகேயன் கிளைமாக்சில் வில்லனை பார்த்துக் கொள்வதாகவும் அவரிடம் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை நடிகர் விஜய் தருவதாகவும் காட்சி அமைந்திருந்தது. இதையடுத்து கோலிவுட்டில் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு நடிகர் விஜய் கொடுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தக் காட்சி குறித்து தற்போது நடிகர் சதீஷ் பேசியுள்ளார்.

கோட் படத்தில் நடிகர் சதீஷ்: அவரது நடிப்பில் வெளியாகியுள்ள சட்டம் என் கையில் படத்தின்பிரமோஷனுக்காக பேசிய சதீஷ், கோட் க்ளைமாக்ஸ் காட்சி குறித்தும் பேசியுள்ளார். கிளைமாக்சில் சிவகார்த்திகேயன் கிட்ட துப்பாக்கியை கொடுத்துட்டு விஜய் போனதுக்கு அப்புறம் அந்த இடத்திற்கு வரும் தான், சிவகார்த்திகேயனிடம், அப்ப நான் அவரிடத்தை பார்த்துக்கட்டா என்று கேட்பதாக காட்சி அமைந்திருந்ததாகவும் ஆனால் அந்தக் காட்சியை எடிட்டிங்கில் தூக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். சதீஷின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், இன்னும் இதுபோன்ற எத்தனை காட்சிகளை நடிகர்களை வெங்கட் பிரபு கோட் படத்தில் இணைத்திருந்தார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X