twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதியாக விஜய் மாறிய காரணம்.. நடிகர் சதீஷ் சொன்ன சீக்ரெட்!

    |

    சென்னை : நடிகர் விஜய் இளைய தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தளபதியாக தற்போது அழைக்கப்பட்டு வருகிறார். விஜய் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வாரிசு படம் ரிலீசாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

    நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் துவங்கிய விஜய்யின் பயணம் பல கரடுமுரடான பாதைகளை கடந்து தற்போது வெற்றிப் பாதையில் பயணம் செய்து வருகிறது.

    திரைத்துறையில் தன்னுடைய 30 ஆண்டுகால வெற்றிப் பயணத்தை முடித்துள்ள விஜய், தொடர்ந்து ஏராளமான ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்.

    இது நம்ம வாழ்க்கை.. நாம தான் டிசைட் பண்ணனும்.. வெற்றி மேடையில் பஞ்ச் பேசிய மைனா நந்தினி! இது நம்ம வாழ்க்கை.. நாம தான் டிசைட் பண்ணனும்.. வெற்றி மேடையில் பஞ்ச் பேசிய மைனா நந்தினி!

    நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    நடிகர் விஜய் ரசிகர்களின் வெற்றி நாயகனாக அவர்களது அன்பிற்கு கட்டுண்டவராக காணப்படுகிறார். சிறுவனாக சில படங்களில் விஜயகாந்த் உள்ளிட்டவர்களுடன் நடித்திருந்தாலும் நாளைய தீர்ப்பு என்ற படத்தில்தான் நாயகனாக இவரது பயணம் துவங்கியது. துவக்கத்தில் அளவிற்கு அதிகமான நெகட்டிவ் விமர்சனங்களையே விஜய் பெற முடிந்தது.

    நெகட்டிவ் விமர்சனங்கள்

    நெகட்டிவ் விமர்சனங்கள்

    இவரெல்லாம் நடிக்க வந்து விட்டார் என்பது போன்று தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையே தன்னுடைய பாசிட்டிவ்வாக மாற்றிக் காட்டினார் விஜய். இதற்காக இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடாகவே இருந்தது. தொடர்ந்து தன்னுடைய கேரக்டர்கள் மூலம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இளைய தளபதி என்ற பட்டத்திற்கு உரியவரானார்.

    ரசிகர்களை கவர்ந்த விஜய்

    ரசிகர்களை கவர்ந்த விஜய்

    துவக்கத்தில் கல்லூரி மாணவனாக அதிரடி கேரக்டர்களில் நடித்த விஜய், தொடர்ந்து காதலுக்கு மரியாதை போன்ற இயல்பான மற்றும் காதல் கதைகளில் நடிக்கத் துவங்கியதே இவரது ஏற்றத்திற்கு காரணமாக அமைந்தது. சிறப்பான கதைக்களங்களுடன் இந்தப் படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் விஜய்.

    காலத்திற்கேற்ற மாற்றம்

    காலத்திற்கேற்ற மாற்றம்

    பிறகு காலத்திற்கு ஏற்றாற்போல தன்னுடைய கேரக்டர்களையும் ஆக்ஷன், காமெடி, நடனம் உள்ளிட்டவற்றில் சிறப்பாக்கிக் கொண்டார். இதற்காக தன்னை மிகவும் அதிகமாக ட்யூன் செய்துக் கொண்டுள்ளார். தற்போது வெளியாகியுள்ள வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி தனது சமீபத்திய பேட்டியில் தற்போதும் விஜய் ஒவ்வொரு நடனத்திற்கும் காட்சிகளுக்கும் ரிகர்சல் செய்வதாக தெரிவித்துள்ளார்.

    இளைய தளபதி டூ தளபதி

    இளைய தளபதி டூ தளபதி

    இதனிடையே இளைய தளபதியாக வலம்வந்த விஜய், தற்போது அவரது ரசிகர்களால் தளபதியாக கொண்டாடப்படுகிறார். இதுகுறித்து தற்போது நடிகர் சதீஷ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். கத்தி படத்தின் சூட்டிங்கின்போது தான் இளைய தளபதியில் இருந்து தளபதியாக மாறவுள்ளதாக விஜய் கூறியதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.

    சதீஷ் சொன்ன ரகசியம்

    சதீஷ் சொன்ன ரகசியம்

    இதற்கான காரணம் குறித்து தான் கேட்டதாகவும் தனக்கும் வயதாவது தெரிவதாக விஜய் கூறியதாகவும் சதீஷ் குறிப்பிட்டுள்ளார். அதற்கு விஜய்க்கு பதிலளித்த சதீஷ், விஜய்யின் லுக்கிற்கு அவர் 60 வயது வரை இளைய தளபதியாகவே இருக்கலாம் என்று தெரிவித்ததாகவும் தனது பேட்டியில் சதீஷ் கூறியுள்ளார்.

    சதீஷ் புதிய படப் பூஜை

    சதீஷ் புதிய படப் பூஜை

    காமெடியனாக கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் சதீஷ் தற்போது நாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் நாயகனாக அவரது இரு படங்கள் ரிலீசான நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த வெங்கி என்பவர் இயக்கத்தில் நாயகனாக நடிக்கிறார் சதீஷ். இந்தப் படத்தின் பூஜையின்போதுதான் விஜய் குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் விஜய் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    விஜய்யின் வெற்றிப் பயணம்

    விஜய்யின் வெற்றிப் பயணம்

    நாளைய தீர்ப்பு போன்ற படங்களில் கல்லூரி மாணவனாக தன்னுடைய பயணத்தை துவக்கிய விஜய், தொடர்ந்து காதல் படங்கள், கமர்ஷியல் படங்கள் என்று தன்னை மெருகேற்றிக் கொண்டு தன்னுடைய திரைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். அதேபோல அவரது இளைய தளபதி பட்டமும் அவரது லுக் மற்றும் வயதை கருத்தில் கொண்டு தற்போது தளபதியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Sathish revealed the secret of Vijay in his new movie poojai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X