ஆங்க்ரி மேனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... காமெடி நடிகர் சதீஷ் பிறந்தநாளில் நடிகர்கள் வாழ்த்து
சென்னை : காமெடி நடிகர் சதீஷ் தனது 34வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.
அவரது பிறந்தநாளையொட்டி நடிகர்கள் ஆர்யா, மனோபாலா உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும் நடிகை பிரியா பவானி சங்கரும் விளையாட்டு தொகுப்பாளர் பாவ்னா பாலகிருஷ்ணனும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் சதீஷ்
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சதீஷ். இவர் நடிகர்கள் விஜய் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார். தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவரது ஸ்டைல் டைமிங் காமெடி. போகிற போக்கில் மற்றவர்களை கலாய்த்து விட்டு செல்வார் சதீஷ்.

திரை பிரபலங்கள் வாழ்த்து
இந்நிலையில் இவர் தனது 34வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரைத்துறை பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது ட்விட்டர் மூலம் இவருக்கு பிரியா பவானி சங்கர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஆங்க்ரி மேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் தம்பி
மூத்த நடிகர் மற்றும் இயக்குநர் மனோபாலாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தம்பி என்று தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்யாவும் ஹாப்பி பர்த்டே டார்லிங் என்று தெரிவித்துள்ளார். இதேபோல ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனமும் சதீஷின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

பாவனா பாலகிருஷ்ணன் வாழ்த்து
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் விளையாட்டு தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் சதீஷுக்கு தனது ட்விட்டர் பக்கங்களின்மூலம் பாராட்டக்களை தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications











