உங்களுக்குள்ள இவ்ளோ திறமையா.. சென்னை மழையை போட்டோ எடுத்த சதீஷ்.. பாராட்டும் ரசிகர்கள்!
சென்னை: திடீரென சென்னையில் மழை மேகங்கள் சூழ்ந்து கொண்டு, சில்லென காற்று வீச சட்டென எடுத்த அதை போட்டோ எடுத்து ட்விட்டரில் போட்டு விட்டார் காமெடி நடிகர் சதீஷ்.
எதிர்நீச்சல், கத்தி, மிஸ்டர் லோக்கல், சுல்தான் என ஏகப்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் சதீஷ்.
ஏஜிஎஸ் தயாரிப்பில் புதிதாக தொடங்கவுள்ள படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

சென்னையில் மழை
கத்தரி வெயில் சுட்டெரித்த வந்த நிலையில், திடீரென தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசப்பட்டது. மழை மேகங்கள் வானில் இருள் சூழ வைத்து பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பொழிந்து சென்றுள்ளது.

நம்ம க்ளிக்
சென்னையில் திடீரென மழை பெய்துள்ள நிலையில், காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நம்ம க்ளிக் என கேப்ஷன் போட்டு மழை மேகம் சூழ்ந்திருக்கும் அழகான போட்டோக்களை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். அவரது போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்குள்ள இப்படியொரு திறமையா என பாராட்டி வருகின்றனர்.

ஏகப்பட்ட திறமைகள்
கிரேஸி மோகனின் நாடக கம்பெனியில் 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த சதீஷ், மதராசப்பட்டினம் படத்திற்கு உதவி வசனகர்த்தாவாக பணியாற்றினார். சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மெரினா, எதிர்நீச்சல், மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன் என பல படங்களில் காமெடி நடிகராக கலக்கி உள்ளார். தளபதி விஜய்யின் கத்தி, பைரவா உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது ஹீரோவாகவும் அப்டேட் ஆகி உள்ளார்.

ஹீரோ சதீஷ்
பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்ததாக சதீஷை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறது. கடந்த மாதம் அந்த படத்திற்கு பூஜையும் போடப்பட்டது. சதீஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லக்ஷ்மி நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











